ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருகிறது… ஐ.நா அறிக்கை!!

Read Time:1 Minute, 53 Second

ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்திருக்கிறது. சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் DNA குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம்.

அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. இதனால் செப்டம்பர் 16-ம் தேதி ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டறிந்தார். அதன் பின்னர் இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, மரம் வளர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால், ஓசோன் படல பாதிப்பு இருந்து மீண்டு வருவதாக கூறியிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post அடை காத்த முட்டை- கூழ்!!(கட்டுரை)