சீனாவுடனான வர்த்தகத்தில் பின்னடைவு… இந்தியா கவலை!!

Read Time:1 Minute, 48 Second

இந்தியா- சீனாவுடனான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பற்றாக்குறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியா- சீனா இடையிலான வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும், 18.63 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இதேபோல் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 84.44 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியது. இருப்பினும் பற்றாக்குறை 51.75 அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்றுள்ள வர்த்தகத்துறை செயலர் அனூப் வதாவன், அந்நாட்டின் வர்த்தகத்துறை இணையமைச்சர் வாங் ஷோவுவென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இந்தியாவிலிருந்து சோயா பீன், மாதுளை ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அவர், வர்த்தக பற்றாக்குறை குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளார்.

மேலும் அரிசி, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பொருட்களுக்காக அந்நாட்டின் சந்தையை இந்தியா எட்டுவதற்கான வழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சீன அமைச்சர் உறுதியளித்ததாக மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்!!(மருத்துவம்)
Next post தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத வழிபாடு!!(உலக செய்தி)