கேமரூன் நாட்டில் 70 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல்!!

Read Time:2 Minute, 5 Second

மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் பள்ளியில் இருந்து 70 குழந்தைகளை போராளிகள் கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேமரூன் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமரூனின் தலைநகரான பாமெண்டாவில் உள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில் புகுந்த ஆயுதம் தாங்கியவர்கள் 70 குழந்தைகள் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்பட 78 பேரை கடத்தி சென்றுள்ளனர்.

முன்னதாக ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிவரும் ஆயுதக் குழுக்கள் பள்ளிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.வட மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் ஆங்கில சட்ட, கல்வி அமைப்புகளுக்கு போதிய அங்கீகாரம் தருவதற்கு அரசு தவறிவிட்டதாக சொல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதியின் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட வெகுஜனப் போராட்டத்தை ஆயுதப் படையினர் ஒடுக்கினர்.

இதையடுத்து அம்பாஜோனியா என்ற புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2017-ம் ஆண்டு ஆயுதக் குழுக்கள் உருவாயின. மேலும் ஆங்கிலம் மொழி பேசும் சில பகுதிகளில் விடுதலை கேட்டு போராடி வரும் பிரிவினைவாதிகள் குழந்தைகளை கடத்தி சென்றிருக்கலாம் என கவர்னர் அடோல்பி லேல் கூறியுள்ளார். மேலும் கடத்தப்பட்டவர்களை தேடும் பணியை அரசு முடுக்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் !!
Next post புரதம் தரும் உணவுகள் !!(மருத்துவம்)