புஜங்காசனம்!!( மகளிர் பக்கம்)
செய்முறை: விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை நேராகவும், பாதம் இரண்டும் ஒன்றாக, விரல்களைத் தரையில் ஊன்றி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் (கைகள் தோள்பட்டைக்கு சற்று கீழே இருத்தல் அவசியம்). முழங்கைகள் பின்நோக்கி இருக்க வேண்டும். நெற்றியை தரையில் வைக்கவும். இது ஆரம்ப நிலை.
கண்கள் இரண்டையும் மெதுவாக மூடிக் கொள்ளவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். குறிப்பாக பின்முதுகுத் தசைகள் (Low back muscles) ஓய்வுநிலையில் இருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளிழுத்து கொஞ்சம் கொஞ்சமாக தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையை தரையில் இருந்து உயர்த்தவும். கைகளை நன்கு ஊன்றி உடலை பின்நோக்கி வளைக்கவும். இப்படி செய்யும்போது பின்முதுகுத்தசைகளை பயன்படுத்தவும், கைகளை பயன்படுத்தக் கூடாது.
முதுகை நன்கு வளைத்த பின்னர், தலையை பின்நோக்கி சாய்த்து மேலே பார்க்கவும். உடல் பார்ப்பதற்கு ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இருக்கும். எனவேதான் இதற்குப் பெயர் புஜங்காசனம். கடைசி நிலையில், அந்தரங்க எலும்பு (Pubic bone) தரையோடு படிந்து, தொப்புள் 3 செ.மீ. வரை மேலே இருத்தல் வேண்டும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் சுவாசத்தை நிறுத்தி மேற்கூறிய நிலையில் இருக்கவும். பின்பு சுவாசத்தை வெளியேற்றி படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். உடலை முழுவதுமாக ரிலாக்ஸ் செய்யவும். இப்படி 3-5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம்.
பயன்கள்…
புஜங்காசனம் நமது வயிற்றுப்பகுதி முழுவதையும் தூண்டுகிறது. இதனால் நமது ஜீரண மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை நீக்க ஒரு சிறந்த ஆசனம். மலச்சிக்கலே பருமன் உள்பட பல நோய்களுக்கு மூல காரணம் என்பது யோகாவின் நம்பிக்கை. மலச்சிக்கலை தீர்ப்பதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. யோக மருத்துவத்தில் இந்த ஆசனம் Slipped disc என சொல்லப்படும் முதுகெலும்பு பிரச்னைக்கு ஒரு தீர்வாக உபயோகப்படுத்தப்படுகிறது.பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating