போர்னோகிராபி ரசிகர்களின் கவனத்துக்கு…!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:7 Minute, 47 Second

ஆண்கள் தங்களுடைய பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் பார்க்கிற ஆபாசப் படங்கள் தாம்பத்ய ஈடுபாட்டைக் குறைப்பதாகவும், இதனால் நீண்ட நேரம் உறவு வைத்து கொள்ள முடியாமல் போவதாகவும் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆணினம் பொதுவாக எதிர்கொள்கிற செக்ஸ் சவாலாக இது அறியப்பட்டாலும், மிகுந்த கவலைக்குரிய விஷயமாகத்தான் இதை அணுக வேண்டியுள்ளது. இல்லற வாழ்வில் ஆண்களை அச்சுறுத்தும் ஆபாசப் படங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஏற்படுத்துகிற பிரச்னைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்னர், என்ன காரணத்தால், ஆணினத்திற்கு இப்பாதிப்பு உண்டாகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வது ஒட்டுமொத்த ஆண் சமூகத்திற்கே நலம் பயக்கும்.

வாழ்க்கைத் துணையுடனான உறவு நிலை, உருவ தோற்றம் மற்றும் இவை மாதிரியான தொடர்புடைய காரணிகள், ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைதல்(Erectile Dysfunction) என்கிற பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான ஆண்களிடத்தில், காணப்படுகிற ED என சுருக்கமாக குறிப்பிடப்படுகிற Erectile Dysfunction கண்டுபிடிக்கக்கூடிய விதத்தில், ஒரு காரணத்தை மட்டும் கொண்டு இருப்பது இல்லை. உடல்நலம் அடிப்படையில், கவனமாக கையாளவேண்டிய சிக்கலான விஷயமான ED ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

உதாரணத்துக்கு, ஓர் ஆண்மகன் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்வது சிரமமாகும். அதுமட்டுமில்லாமல், ‘ஆவலைத் தூண்டுவதோடு, பிரச்னையைத் தீவிரப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடான தாம்பத்ய உறவில், பாதிப்பு ஏற்பட ED காரணமாக இருந்தால், இப்பிரச்னை இன்னும் மோசமான நிலையை அடையும். இரண்டாம் கட்ட ED என்பது, ஆணின் வாழ்க்கையில், பின் பாதி காலத்தில் ஏற்படக் கூடியதாகும். இதற்கும் மருத்துவ உலகில் ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக, உளவியல் அடிப்படையிலான பிரச்னைகள், செக்ஸ் பற்றிய ஆர்வம், ரத்த நாளக் குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள், நீரிழிவு காரணமாக வருகிற நரம்பு பிரச்னைகள், விதைப்பை பாதிப்புகள் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. இதில் போர்னோ படங்கள் பார்க்கும் ஆர்வம் காரணமாக நாளடைவில் ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாட்டினை Porn induced erectile dysfunction என்றே குறிப்பிடுகிறார்கள்.

‘தனக்கான இணை கிடைக்காத ஏக்கம், பொருத்தமான இணை கிடைக்கவில்லை என்ற கவலை, சில நேரங்களில் அதீத செக்ஸ் ஆர்வம் என செக்ஸ் ஆர்வத்தினைத் தணிக்கும் தற்காலிக வடிகாலாக போர்னோ படங்கள் பார்க்கத் தொடங்குகிறவர்கள், நாளடைவில் அதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள். நிஜ வாழ்வில் அவர்களுக்கு பொருத்தமான இணை கிடைத்தாலும் அவர்களை Porn induced erectile dysfunction செயல்படாமல் தடுக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு முற்றிலும் மாறாக, போர்னோ படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆய்வுகளும் சில நடைபெற்றிருக்கின்றன. ‘தாம்பத்ய உணர்வை ஏற்படுத்தவும், விறைப்புத்தன்மையினை அதிகரிப்பதற்கும் போர்னோ படங்கள் உதவுகின்றன. அதிலும் உளவியல் அல்லது உறவுகள் பற்றிய கவலைகளால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைதல் ஏற்படுகிறபோது, இது மாதிரியான திரைப்படங்கள் அக்குறையினை நிவர்த்தி செய்வதாக, அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இன்றுவரை Erectile Dysfunction என்ற சொல், இணையதள அமைப்புகளிலும் மற்றும் மருத்துவத்தோடு தொடர்பற்ற ஆதாரங்களில் உபயோகிக்கப்படுகிறது. அறிவியல்ரீதியான ஆய்வுகள் எப்போதாவதுதான் செக்ஸ் படங்களுக்கு அடிமையாதல் பற்றி விவாதிப்பதாகவும் அல்லது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைதலில் இவ்வகை படங்கள் பங்கு பெறுவதாகவும் வலியுறுத்தப்படுகிறது. இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்கிறார்கள் போர்னோவை ஆதரிப்பவர்கள்.

போர்னோகிராபி என்பது மிகவும் லாபகரமான பணம் கொழிக்கும் ஒரு தொழில். விறைப்புத்தன்மை பிரச்னை குறித்த அச்சம் ஏற்பட்டால் பலரும் போர்னோவைத் தவிர்ப்பார்கள் என்ற கவலையாலேயே அதற்கு ஆதரவாக சிலர் கொடி பிடிக்கிறார்கள் என்று இந்த ஆய்வு பற்றியும் விடாப்பிடியாக மீண்டும் கவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆண் சமூகத்தை அச்சுறுத்தும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு உரிய சிகிச்சை முறைகள் பற்றி,American association of sexuality educators counselors and therapists (AASECT) அமைப்பினர் இதுபற்றிக் கூறியிருப்பது கவனத்துக்குரியது… ‘போர்னோ படங்கள் பற்றி சர்ச்சை இருக்கும் நிலையில் முடிந்தவரை அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதே மனநலனுக்கும், உடல்நலனுக்கும், தாம்பத்ய நலனுக்கும் உதவி செய்யும்.

அப்படி விறைப்புத்தன்மை மற்றும் தாம்பத்ய குறைபாடுகள் ஏற்பட்டாலும் கவலை கொள்ள வேண்டியதில்லை. சிறப்பான மருத்துவ முறைகளின் மூலம் அவற்றை சரி செய்ய முடியும். உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் முதலான வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருதல், ED குறைபாடுகளுக்கான மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலியக்க பாதிப்புகளுக்கான அறுவை சிகிச்சை போன்றவற்றை இப்பிரச்னைக்கான சிகிச்சைகளாக மேற்கொள்ளலாம்’ என்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாப்பாவுக்கு எத்தனை மார்க்?!(மருத்துவம் )
Next post ரகசிய கேமராவில் சிக்கிய SNS கல்லூரி முதல்வர்!!(வீடியோ)