நாட்டு மக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்!!(உலக செய்தி)
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக நேற்று ஜமகண்டி தொகுதியில் பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஜமகண்டி அருகே சாவலிகி கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதாகவும், ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றி விட்டார்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று பிரதமர் குற்றச்சாட்டுகளை கூறினார். தற்போது பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றிருப்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க தயாராகி விட்டனர். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating