பாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு! !(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 28 Second

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.

ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..?(வீடியோ)
Next post சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – ராகுல் காந்தி கைது!!(உலக செய்தி)