30-ந் தேதி உலக அழகி போட்டி:`நீச்சல், உடை அழகி’ பிரிவில் இந்திய அழகிக்கு 2-வது இடம்

Read Time:1 Minute, 55 Second

WorldBeaut-India.jpgமிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து 104 அழகிகள் வார்சா சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் நடாஷாசூரி கலந்து கொள்கிறார். உலக அழகிபோட்டியையொட்டி அந்த அழகிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் போட் டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

முதல் கட்டமாக பீச்வியர் எனப்படும் கடற்கரை நீச்சல் உடை அழகிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெனி சுலா அழகி முதல் இடத்தை பிடித்தார். நடாஷா சூரி 2-வது இடத்தை பிடித்தார்.

இதே போல ஆடை அலங்கார போட்டியில் நடாஷாசூரி 3-வது இடத்தை பிடித்தார். இதே போல மேலும் சில பிரிவுகளில் நடாஷாசூரி முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

உலக அழகி போட்டியில் மிஸ் வேர்ல்டு பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் பற்றி சூதாட்டங்களும், கருத்துக்கணிப்புகளும் இப்போதே தொடங்கி விட்டன.

ஒரு நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் வெனிசுலா அழகி, இந்திய அழகி இவர்களில் ஒருவருக்கு பட்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆசியாவில் இருந்து சென்றுள்ள அழகிகள் வரிசையில் நடாஷா சூரிதான் முதல் இடத்தில் இருப்பதாக இன்னொரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.

WorldBeaut-India.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி, தற்காலிக பிரதமர் ஆனார்
Next post சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் எதிர்ப்பு தெரிவித்த சதாம் உசேன் வெளியேற்றப்பட்டார்