கிச்சன் டிப்ஸ்!!( மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 4 Second

*சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் இந்துப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த அங்காயப் பொடியை போட்டு சாப்பிடவும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
– பா.குணா, வயலூர்.

*சமையல் பாத்திரத்தின் அடியில் சோப்பைத் தடவி அடுப்பில் வைத்தால் கரி பிடிக்காது. கொஞ்சம் பிடித்த கரியும் எளிதாக கழுவி விடலாம்.

*கலவை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்தால் சாதம் கட்டி, கட்டியாக இருக்காது.
– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து, பொடியாக்கி ரசம் கொதிக்கும்போது சேர்த்துவிட்டால் மணமும், சுவையும் கூடும்.

*பிஸ்கெட் வைக்கும் டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி விட்டால் பிஸ்கெட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.

*சப்பாத்தி மீந்துவிட்டால் ஈரத்துணியால் சுற்றி வைத்தால் அடுத்த வேளைக்கு பயன்படும்.

*கேக் செய்யும் கலவையில் கொஞ்சம் தேன் சேர்த்தால் சுவையான மிருதுவான கேக் தயார்.
– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

*காய்ந்துபோன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை வீசி எறிந்துவிடாமல் இட்லி பானையினுள் தண்ணீரில் போட்டு வைத்தால், வேக வைக்கும் இட்லிகள் மணமாக இருக்கும்.

*குழம்பு லேசாக கொதி வந்த பிறகே காய்களைப் போட்டு வேகவைக்க வேண்டும். காய்கள் நன்றாக வெந்தபின் இறக்கி பிறகு தாளிதம் செய்து அதில் கொட்டினால் குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*பாலை உறை ஊற்றி வைக்கும்பொழுது அதில் கொஞ்சம் ‘அரிசிக் கஞ்சி’யைக் கலந்து ஊற்றி வைத்தால், தயிர் பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாக இருக்கும்.

*குறைந்த அளவு காரத்துடன் ‘புளியம் பூவையும்’ அதன் ‘கொழுந்தையும்’ அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், பசி மயக்கம், வயிற்றுவலி முதலிய உபாதைகள் வராது.
– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

*சூடம் டப்பாவில் சில மிளகுகளை போட்டு வைத்தால் சூடம் கரையாமல் இருக்கும்.*சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் இந்துப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த அங்காயப் பொடியை போட்டு சாப்பிடவும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
– பா.குணா, வயலூர்.

*சமையல் பாத்திரத்தின் அடியில் சோப்பைத் தடவி அடுப்பில் வைத்தால் கரி பிடிக்காது. கொஞ்சம் பிடித்த கரியும் எளிதாக கழுவி விடலாம்.

*கலவை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்தால் சாதம் கட்டி, கட்டியாக இருக்காது.
– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து, பொடியாக்கி ரசம் கொதிக்கும்போது சேர்த்துவிட்டால் மணமும், சுவையும் கூடும்.

*பிஸ்கெட் வைக்கும் டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி விட்டால் பிஸ்கெட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.

*சப்பாத்தி மீந்துவிட்டால் ஈரத்துணியால் சுற்றி வைத்தால் அடுத்த வேளைக்கு பயன்படும்.

*கேக் செய்யும் கலவையில் கொஞ்சம் தேன் சேர்த்தால் சுவையான மிருதுவான கேக் தயார்.
– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

*காய்ந்துபோன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை வீசி எறிந்துவிடாமல் இட்லி பானையினுள் தண்ணீரில் போட்டு வைத்தால், வேக வைக்கும் இட்லிகள் மணமாக இருக்கும்.

*குழம்பு லேசாக கொதி வந்த பிறகே காய்களைப் போட்டு வேகவைக்க வேண்டும். காய்கள் நன்றாக வெந்தபின் இறக்கி பிறகு தாளிதம் செய்து அதில் கொட்டினால் குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*பாலை உறை ஊற்றி வைக்கும்பொழுது அதில் கொஞ்சம் ‘அரிசிக் கஞ்சி’யைக் கலந்து ஊற்றி வைத்தால், தயிர் பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாக இருக்கும்.

*குறைந்த அளவு காரத்துடன் ‘புளியம் பூவையும்’ அதன் ‘கொழுந்தையும்’ அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், பசி மயக்கம், வயிற்றுவலி முதலிய உபாதைகள் வராது.
– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

*சூடம் டப்பாவில் சில மிளகுகளை போட்டு வைத்தால் சூடம் கரையாமல் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம்!!(வீடியோ)
Next post தமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்!!(கட்டுரை)