ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 4 கனடா நாட்டு ராணுவ வீரர்கள் பலி

Read Time:1 Minute, 29 Second

Afganisthan.Flag.jpgஆப்கானில் நேற்று முன்தினம் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதல்களில் 18 பேர் பலியாயினர். அங்கு மூகாமிட்டுள்ள பன்னாட்டுப் படைகள் தாலிபான் இயக்கத்தினர் வசம் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற மேற்க்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தலைநகர் காந்தகாருக்கு மேற்கில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகாரி என்ற இடத்தில் முதல் தாக்குதல் நடைபெற்றது. பள்ளிக்குழந்தைகளுக்கு பேனா, நோட் புக் போன்ற பரிசுப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த கனடா நாட்டு இராணுவ வீரர்கள் மீது பைக்கில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி பைக்குடன் மோதி வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த முகமது கரீம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 4 வீரர்கள் பலியாயினர். 12 ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போப் ஆண்டவர் துருக்கி செல்கிறார் முஸ்லிம் உறவுக்கு கை கொடுக்கிறார்
Next post தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி, தற்காலிக பிரதமர் ஆனார்