லேட்டா சாப்பிடுறவங்களுக்கு கேன்ஸர் அபாயம்!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 47 Second

இரவு உணவை சீக்கிரமாகவே முடித்துக் கொள்வது நல்ல பழக்கம் என பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு, சாப்பிட்ட உணவு செரிமானமாகி வயிறு காலியாக படுத்தால் நல்ல தூக்கம் வரும் என்று முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், இப்போது அந்தப் பழக்கம் நம்மை புற்றுநோய்களிலிருந்தும் காக்கும் என்று கூறுகிறது ஒரு நவீன ஆய்வு. படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிடுவது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கான குறைவான ஆபத்தோடு தொடர்புடையதாகிறது.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் உணவுத் தேர்வுகளோடு புற்றுநோய் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களில் உணவு உட்கொள்ளுதல் மற்றும் உணவு உட்கொள்ளும் நேரத்தால் ஏற்படும் ஆரோக்கிய விளைவுகளை யாரும் கவனித்திருக்கவில்லை. புற்றுநோயின் சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஸ்பானிஷ் ஆய்வுக்கு, 621 புரோஸ்டேட் புற்றுநோய் நோயாளிகளும் 1,205 மார்பக புற்றுநோயாளிகளும், மற்றும் புற்றுநோய் இல்லாத 872 ஆண்கள், மற்றும் 1,321 பெண்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை ஆராய்ந்தனர்.

இவர்களில், இரவு 9 மணிக்கு முன்னர் இரவு உணவை முடித்தவர்கள் அல்லது இரவு உணவுக்குப் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் சென்றவர்கள் மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோயை 20% குறைவாகக் கொண்டிருந்தனர். தினசரி உணவை உட்கொள்ளும் முறை மற்றும் கடைசி உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே நீண்ட இடைவெளியைக் கொண்டிருப்பதும் குறைவான புற்றுநோய் ஆபத்துடன் தொடர்புடையது. மேலும் உணவு மற்றும் புற்றுநோய் குறித்த ஆய்வுகளில், உணவு உண்ணும் நேரத்தையும் மதிப்பீடு செய்வது முக்கியம் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு!!(கட்டுரை)
Next post காதல் இல்லா உலகம்?(அவ்வப்போது கிளாமர்)