ஈராக்கில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 62 அப்பாவிகள் பலி

Read Time:1 Minute, 38 Second

irak.flag.jpgஈராக்கில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டதிலிருந்து நாள்தோறும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 62 பேர் பலியாகினர். ஈராக்கின் வடபகுதியில் உள்ள டெல்_அபார் நகரில் தற்கொலைப்படை திவிரவாதி நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாயினர். சன்னி முஸ்லீம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரமாடி நகர அல்_கொரியா காவல் நிலையத்தின் மீது நடந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத் நகரில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்த சியா பிரிவு முஸ்லீம்கள் மீது தீவிரவாதி ஒருவன் சரமாரியாக சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்.

ஆயிரக்கணக்கான ஈராக்கிய மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், கடந்த ஜூன் மாதத்திலிருந்து சன்னி மற்றும் ஷியா ஆகிய இருபிரிவினரிடையே நடைபெற்றுவரும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இங்கிலாந்து இளவரசியின் நிர்வாண போட்டோ விலைக்கு கிடைக்கிறது
Next post போப் ஆண்டவர் துருக்கி செல்கிறார் முஸ்லிம் உறவுக்கு கை கொடுக்கிறார்