பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 19 Second

தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். உடல் சமநிலைக்கு வந்து விடும்.சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும்.மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. பொடுகுத் தொல்லை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும்.

வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச்சாறு சில வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்புளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு…

மனச்சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அது போல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும்.உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன இன்டர்போல் தலைவர் எங்கே? (உலக செய்தி)
Next post 🔞⚨கருமம் கருமம் இப்படி எல்லாமா ⚢🛇dubsmash பன்னுவாங்க …🙄😝😝😲😲😲 நாசமா போச்சு.!!(வீடியோ)