இந்தோனேசியா சுனாமி – 1763 பேர் பலி – 5 ஆயிரம் பேரை காணவில்லை!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 34 Second

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 1763 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பலரோவா மற்றும் பெட்டோபோ நகரங்களில் சுமார் 5 ஆயிரம் மக்களை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ இன்று அறிவித்துள்ளார்.

மலையடிவாரங்களிலும், சகதிக்குள்ளும் சிக்கி கிடக்கும் பல பிரேதங்களை மீட்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலியூரில் அடாவடி செய்த போலிஸை சுற்றி வளைத்து ஊர்மக்கள் சரமாரியான கேள்விகள் | திணறிய போலிஸ்!!(வீடியோ)
Next post அரசியல் வாதிகளுக்கு அரசியல் சொல்லி கொடுத்தது இந்த வீடியோ தான் மறக்காம பாருங்க!!(வீடியோ)