இங்கிலாந்து இளவரசியின் நிர்வாண போட்டோ விலைக்கு கிடைக்கிறது

Read Time:3 Minute, 12 Second

uk.gifஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் தங்கையும் இளவரசியுமான மார்கரெட்டின் நிர்வாண போட்டோ 50 பிரதிகள் எடுக்கப்பட்டு மார்க்கெட்டில் விலைக்கு விற்கப்படுகின்றன. இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத்தின் தங்கை மார்கரெட். இவருக்கு அவரது 30 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 1962-ம் ஆண்டு அவரை நிர்வாணமாக நிறுத்தி அவரது கணவரே போட்டோ எடுத்தார். அவர் பெயர் லார்டு ஸ்நோடான்.

இப்போது 76 வயதான அவர் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள குளியல் தொட்டியில் இந்த போட்டோவை எடுத்தார். தலையில் மட்டும் கீரிடம் போன்று நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை போன்ற ஒன்றை இளவரசி அணிந்து இருந்தார்.

ஒரு படம் ஒருலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

மார்கரெட்டை பிறகு ஸ்நோடான் விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். விஸ்கவுண்ட் லின்லே என்று பெயர். இளவரசி மார்கரெட் இப்போது உயிருடன் இல்லை.

மார்கரெட் சேர்த்து வைத்து இருந்த அரிய பொருள்களை லின்லேயும், அவரது தந்தையும் விற்று 98 கோடி ரூபாய் திரட்டி உள்ளனர். மார்கரெட்டிடம் இருந்த இந்த நிர்வாண போட்டோவையும் அவர்கள் விற்க இருக்கிறார்கள். 50 பிரதிகள் போட்ட ஒரு போட்டோ ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று விற்க இருக்கிறார்கள். இதற்காக இந்த போட்டோவை அவர்கள் காட்சிக்கு வைக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ராணி எலிசபெத்துக்கு வருத்தம்

இந்த நிர்வாண போட்டோ வெளியாகி இருப்பது ராணி எலிசபெத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அரண்மனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்மேலும் `கூறுகையில் இந்த போட்டோ ஆபாசமாக இருக்கிறது. இது ராணியின் மனதை புண்படுத்தும்’ என்றும் அந்த அதிகாரி கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை கூறியுள்ளது.

இந்த நிர்வாண போட்டோ கண்ணியக்குறைவாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக கூறப்படுவதை இளவரசியின் முன்னாள் கணவர் லார்டு ஸ்நோடான் ஏற்க மறுத்தார். அவள் எவ்வளவு அழகாக இருந்தாள். இது கண்ணியமாக இருக்கிறது. இப்போது சிலர் அணியும் டிரசை விட இது கண்ணியமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரதமருக்கு எதிராக ராணுவ புரட்சி: தாய்லாந்தில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது
Next post ஈராக்கில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 62 அப்பாவிகள் பலி