எலிக்காய்ச்சல் எச்சரிக்கை!!( மருத்துவம்)

Read Time:3 Minute, 12 Second

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, மனிதனுக்குப் பல வகையிலும் பிரச்னைகள்தான். ஒரு பக்கம் வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு, ஆடு, மாடு முதலான கால்நடைகள் உயிரிழப்பு என பொருளாதாரம் அடிப்படையில் இழப்பு உண்டாகி ஏராளமான சிக்கல்களால் அவதிப்படுவான். இன்னொரு பக்கம் கொசு, எலி போன்ற உயிரினங்களிடம் இருந்து தண்ணீர் மூலமாகப் பரவும் மலேரியா, டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல்(Leptospirosis) ஆகிய உயிர்க்கொல்லி நோய்களால் தொல்லைக்கு ஆளாவான். இதில் சமீபகால அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது எலிக்காய்ச்சல்.

கேரளாவை உலுக்கி எடுத்த மழை வெள்ளத்துக்குப் பிறகு, சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் 71 பேருக்கு எலிக் காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 12 பேர் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர் என்கிறார்கள். 800 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

தமிழகத்திலும் திருப்பூர் மாவட்டம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த காந்திமதி ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்குச் சென்று திரும்பிய பின்னர், கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கோவையில் தங்கி இருந்த லாரி டிரைவர் சதீஷ்குமாரும் இந்நோயால் உயிரிழந்துள்ளார். எலிகளின் கழிவுகளான சிறுநீர், மலம் கலந்த தண்ணீரைச் சுகாதாரம் அற்ற நிலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துதல் நீரை கொதிக்க வைத்து,

நன்றாக வடிகட்டி குடிக்காதது, எலிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து போதல் (தகுந்த காலணிகள் உபயோகிக்காமல் இருத்தல்; இதனால், நகக்கண் வழியாக அக்கழிவுகளில் உள்ள கிருமிகள் உடலினுள் செல்லுதல்) போன்றவை காரணமாக எலிக்காய்ச்சல் பெரும்பாலானோரைத் தாக்குகிறது. எனவே, நோய்த்தடுப்பு முயற்சியில் அரசும், பொதுமக்களும் இன்னும் எச்சரிக்கையோடு இருப்பதே நம்மை
எலிக்காய்ச்சலில் இருந்து காப்பாற்றும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவு நோயால் அவதியுறுகிறீர்களா? (மகளிர் பக்கம்)
Next post சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு!!(அவ்வப்போது கிளாமர்)