அழகூட்டுவதும் ஒரு கலை!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 18 Second

ஒரு வேலையின் வெற்றி என்பதே எல்லாவற்றையும் சரியான முறையில் திட்டமிட்டு, தேவையானவைகளை சரியான முறையில் வரிசைப்படுத்தி, குறிப்பிட்ட நேரத்துக்குள், வெற்றியுடன் செய்து முடிப்பதிலேயே உள்ளது. அந்தத் திட்டமிடலுடன் பணி செய்பவர்களே வாழ்க்கையில் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படியொரு திட்டமிடலுடன் பணியாற்றுபவர்தான் ஃபாத்திமா. மணப் பெண்களுக்கான மேக்கப் ஆர்டிஸ்ட். மணப் பெண்ணிற்கான ப்ரைடல் மேக்கப் துறையினை தேர்ந்தெடுத்து அதில் அத்தனை நுணுக்கங்களையும், நெளிவு, சுளிவுகளையும், கடைசி நேர நெருக்கடிகளையும் சமாளிப்பவர்.

திருமண உடைகளையும், ஆபரணங்களையும் வாங்கியதுமே அடுத்ததாக திருமண வீட்டார் அணுகுவது, மணப்பெண்களை அலங்கரிக்கும் ஒப்பனைக் கலைஞர்களான மேக்கப் ஆர்டிஸ்டுகளைத்தான். அது குறித்து திருமணப் பெண்களுக்கான ஒப்பனைக் கலைஞர் ஃபாத்திமாவிடம் பேசியபோது..

“இத்துறைக்கு வருவதற்கு முன்பு, ஐ.டி.யில் வேலையில் இருந்தேன். ஐ.டி. துறையில் தொடர்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. எனவே அந்த வேலையை விட்டுவிட்டு எனக்குப் பிடித்த துறையான, ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அவார்ட் வின்னர் மேக்கப் ஆர்டிஸ்டான செலிபிரேட்டி ஆர்ட்டிஸ்ட் சுனிதா சிங் உடன் பணியாற்றி ப்ரைடல் மேக்கப்பின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் கற்றேன். போட்டோ ஷூட், மாடலிங் ஷூட், புரோமோஷன் ஷூட்ஸ் என எல்லாவற்றிற்கும் மேக்கப் போடுவேன்.

உலகத் தரம் வாய்ந்த பெஸ்ட் ப்ராடக்ட்களையே மேக்கப்பிற்காகப் பயன்படுத்துகிறேன். நான் பயன்படுத்தும் அத்தனை மேக்கப் சாதனங்களும் நம்பர் ஒன் பிராண்டட். விலை உயர்ந்தவை.15 ஆயிரத்தில் இருந்து ப்ரைடல் மேக்கப்பிற்காக வாங்குகிறேன். ஒரு திருமணத்தில் மணப் பெண்ணிற்கு மேக்கப் போட என்னை ஒப்பந்தம் செய்தால், திருமணம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மணப் பெண்ணுக்கு, ஃப்ரீ ட்ரையல் மேக்கப் போட்டுக் காட்டிவிடுவேன். மணப் பெண்ணின் வீட்டிற்கே சென்று, அவர்களின் திருமண உடை, ரிசப்ஷன் உடை, அவர்களுக்குத் தேவையான ஹேர் டிரஸ்ஸிங் இவற்றை எல்லாம் கேட்டு, அவர்களின் விருப்பத்தையும் அறிந்து, அதற்கேற்ப மேக்கப் போட்டுக் காட்டுவேன். அதில் மேலும் ஏதாவது தேவை மற்றும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை திருமணத்தில் சரிசெய்து விடுவேன்.

மணப் பெண்ணிற்கு வேண்டிய கல்யாண ஜூவல்லரி செட்களை அவர்கள் விரும்பிக் கேட்டால் அதையும் ஏற்பாடு செய்து தருகிறேன். சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் நிகழும் திருமணங்களிலும் என் பங்களிப்பு இருக்கும். எனது நெட்வொர்க்கை சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக், இன்ஸ்டா மூலமாக புரொமோட் செய்கிறேன். முகூர்த்த நாட்களில் மூன்று ப்ரைடல் மேக்கப்பாவது எனக்குத் தொடர்ந்து கிடைத்து விடும்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சற்றுமுன் குன்றத்தூர் அபிராமிக்கு கிடைத்த தண்டனை அதிர்ச்சியில் உறைந்த கணவர்!!(வீடியோ)
Next post அபிராமியை சுந்தரம் வசியம் செய்தது இப்படிதான்!!(வீடியோ)