விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 56 Second

டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

உலகின் 4 முக்கிய டென்னிஸ் போட்டிகள்

(1) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
(2) யு.எஸ். டென்னிஸ் போட்டி
(3) பிரெஞ்ச் டென்னிஸ் போட்டி
(4) ஆஸ்திரேலியன் டென்னிஸ் போட்டி

* இந்த 4 போட்டிகளுமே கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நான் கையும் ஒரே வருடத்தில் வெல்வது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
* பெண் வீராங்கனையைப் ெபாறுத்தவரை ஸ்டெபிகிராஃப், இப்படி ஒரே வருடத்தில் நான் கு போட்டிகளும் இருமுறை (1988-89; 1993- 94) வென்று சாதனை படைத்துள்ளார்.
* செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே 2002-03-ல் 4 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தார்.
* இந்த வருடம் இப்படி சாதிக்க, செரீனா வில்லியம்ஸ் மறு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
* இதுபோல் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.
* விம்பிள்டன் போட்டி 1877-ம் ஆண்டு, 22 வியாபார நோக்கமில்லாத அமெச்சூர் டென்னிஸ் வீரர்களுடன் துவக்கப்பட்டது. இதில் வென்றவர் ஸ்பென்சர் கோர்.
* 1881-ம் ஆண்டு முதல் பெண்கள் ஒற்றையர் விம்பிள்டன் போட்டி நடந்தது.
* மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ். இவர் 1991-ம் ஆண்டு தன்னுடைய 15-வது வயதில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் வென்றார்.
* இந்த வருடம் விம்பிள்டன் போட்டிகள் ஜூலை 2-ம் தேதி, திங்கட்கிழமை துவங்கி ஜூலை 15-ம் தேதி (ஞாயிறு) முடிவடையும்.
* 2018-ம் ஆண்டின் மொத்த பரிசுத்தொகை 34 மில்லியன் பவுண்ட்ஸ் (1 பவுண்டு 91.68) இது கடந்த ஆண்டு பரிசைவிட 7-6 சதவிகிதம் அதிகம். இந்த தொகை 2008-ம் ஆண்டு 11.8 மில்லியன் பவுண்ட்ஸ்தான் பரிசுத் தொகையாக இருந்தது. இப்போது இது மூன்று பங்குக்கும் அதிகமாக உயர்ந்து விட்டது.
* பெண்கள் ஒற்றையர் போட்டிகள் விம்பிள்டனில் துவங்கி 126 ஆண்டுகள் ஆகின்றன.
* அலெக் சான்டிராஸ்டீவன்சன் (1999) மற்றும் செரீனா வில்லியம்ஸ் (2008) ஆகியோர், அதிகபட்சமாக 57 `ace’ களை போட்டுள்ளனர். அது என்ன `ace’ சர்வீஸ் போடுபவர், அடிக்கும் பந்தை எதிர்முனையில் ஆடுபவர் எடுக்காமல், எல்லைக்கோட்டுக்குள் விழுந்தால் அது ‘ஏஸ் (ace) என அழைக்கப்படும்.
* இதுவரை, மிக அதிக ஒற்றையர் ஆட்டத்தில் பங்கேற்று தோற்ற பெருமை வீராங்கனை கிரிஸ் எவர்ட்டுக்கு உண்டு. இவர் ஏழுமுறை இறுதி ஆட்டத்தில் பங்கு பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
* மிக அதிக போட்டிகளில் பங்கு கொண்ட வீராங்கனை என்ற பெருமை மார்ட்டினா நவரத்தலோவாவுக்கு உண்டு. இவர் விம்பிள்டனில் மட்டும் 326 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
* விம்பிள்டனில் மிக அதிக போட்டிகளில் வென்ற பெருமையும் மார்ட்டினா நவரத்தலோவாவுக்கு உண்டு. இவர் ஒற்றையர் போட்டியில் 9 போட்டிகளில் வென்றுள்ளார்.
* எலிசபெத் ரயின் என்ற வீராங்கனை 12 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார்.
* 2013-ம் ஆண்டு மிக அதிகபட்சமாக மொத்தம் 757 வீரர்கள், விம்பிள்டனில் பங்கேற்றனர்.
* விம்பிள்டனில் மொத்தம் 660 போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் இவற்றில் முக்கியமானவை.
* 1887-ல் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் சால்லலோட்டி டாட் என்ற பெண் வென்றார். அப்போது அவர் வயது 15 வருடம் 285 நாட்கள்.
* இந்த வருட விம்பிள்டன் போட்டிகள் 200 நாடுகளில் நேரலை செய்யப்படுகின்றன.
* வியாபார நோக்கில் விளையாடும் வீரர்களும், 1977-ம் ஆண்டு முதல் விம்பிள்டனில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள். அதன் 50 வருடம் இந்த வருடம்.
* விம்பிள்டன் போட்டிகள் நடத்த உதவும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் மற்றும் க்ராகெட் கிளப் – 23 ஜூலை, 1868-ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதுதான் விம்பிள்டன் போட்டிகளை நடத்துகிறது. ஆக அதற்கு வயது 150.
* இந்த வருட ஸ்பெஷல் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வீரர் ராட்லீவர் மற்றும் முன்னாள் வீராங்கனை பில்லிஜான்கிங் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
* விம்பிள்டனில் ஆண்கள்/பெண்கள் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் சார்ந்து கௌரவ சீடிங்ஸ் வழங்கப்படுகின்றன. இதில் 16 பேர் ஒவ்வொரு போட்டியிலும் அறிவிக்கப்படுவர். ஆனால் இதில் இடம் கிடைக்காமல், அதேசமயம் விம்பிள்டன் போட்டியில் வென்ற பெருமை போரீஸ் பெக்கருக்கு மட்டுமே உண்டு. இவர் 1985-ம் ஆண்டு, தன்னுடைய 17 வயதில் இந்த சாதனையைச் செய்தார்.

* ஒரு காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட டென்னிஸ் மட்டையை வைத்துத்தான் விளையாடினர். ஆனால் 1987-ம் ஆண்டு இது விலக்கிக் கொள்ளப்பட்டது.
* விம்பிள்டன் போட்டிகளை சுமார் 400 மில்லியன் மக்கள் பார்க்கின்றனர்.
* 1922, 1931, 1976, 1977, 1993, 1995 மற்றும் 2009, 2010-ம் ஆண்டுகளில் மட்டுமே மழையினால் பாதிக்கப்படாமல், முழு போட்டிகளும் நடந்துள்ளன.
* விம்பிள்டன் போட்டியை ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 38,500 ரசிகர்கள் நேரடியாகப் பார்க்கின்றனர்.
* டென்னிஸில் `Hawkeye’ ஐ பயன்படுத்துகின்றனர். இது கிரிக்கெட் போட்டிகளில் அவுட்டில் சந்தேகம் வரும்போது, மூன்றாவது அம்பயரை கேட்பதுபோல், டென்னிஸ் போட்டியில் ‘‘ஹாக்ஐ’’ பயன்படுத்தி சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்கின்றனர்.
* இதுவரை நடந்த போட்டிகளில், மிக நீளமாக நடந்தது 2010-ம் ஆண்டு ஜான்ஐஸ்னர் மற்றும் நிக்கோலஸ் மகுத் இடையே நடந்த போட்டிதான். இது 11 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடித்தது. அதாவது மூன்று நாட்கள் தொடர்ந்தது. இறுதி ஸ்கோர் = 6-4, 3-6, 6-7, 7-6, 70-68. இதில் கடைசி ஆட்டம் 8 மணி நேரம் 11 நிமிடம் நீடித்தது.
* மிக நீண்ட வருடங்கள் வெள்ளை டென்னிஸ் பந்தை வைத்துத்தான் போட்டிகள் நடந்தது. டி.வி. பார்வையாளர்களுக்கு, வெள்ளை பந்து சரியாகத் தெரிவதில்லை என குறை கூறப்பட்டதால் 1986-ம் ஆண்டு முதல் மஞ்சள் பந்துக்கு மாற்றப்பட்டது.
* 2008-ம் ஆண்டு வீனஸ் வில்லியம்ஸ், தன் சர்வீஸை மணிக்கு 128 மைல் வேகத்தில் போட்டார்.
* 2019-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் பெண் வீராங்கனைகள் பங்களிப்பை அதிகரிக்கப் போகின்றனர்.
* இந்த வருட விம்பிள்டன் போட்டிகள் 18 கோர்ட்டுகளில் நடக்க உள்ளன!

மேலும் தகவல்கள்

* ஆண்/பெண் இரு ஒற்றையர் பட்டம் பெறுபவர்களுக்கும் பரிசுத் தொகை ஒன்றுதான். அது 2.25 மில்லியன் டாலர்.
* கிராண்ட்ஸ்லாம் போட்டி, புல்லில் நடப்பது விம்பிள்டனில் மட்டுமே.
* இறுதிப் போட்டிக்கு டிக்கெட் விலை 2667 பவுண்ட். இது கடந்த ஆண்டைவிட 1½ பாதி விலைக்கும் அதிகம்.
* பெண்கள் இறுதி ஆட்டத்திற்கு டிக்கெட் 1510 பவுண்ட். இதன் டிக்கெட் ஏற்கனவே விற்றுவிட்டது.
* இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கினால் பார்க்கிங் ப்ரீ, லஞ்ச் ப்ரீ, செர்ரீ ஐஸ்கிரீம ப்ரீ/ ஷாம்பெய்ன் மது ப்ரீ.
* விம்பிள்டனில் முக்கிய ஆட்டங்களில் உலகின் மிகப் பிரபலமானவர்களை பார்க்கலாம். குறிப்பாக நமது சச்சின் டெண்டுல்கரை காணலாம்.
* விம்பிள்டன் என்பது உண்மையில் ஒரு கிராமம். போட்டிகள் நடக்கும்போது மட்டும் படு பரபரப்பாக இருக்கும்.
* இந்திய டென்னிஸ் வீரர்களின் பங்கு மிக மிக குறைவு. ராமனாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, மற்றும் சானியா மிர்சா ஆகியோர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் வெற்றிகளை பெற்று இந்தியாவின் பெயரை பதிவு செய்துள்ளனர். இப்போது அதுவும் குறைந்துவிட்டது. சானியா மிர்சா தற்போது கர்ப்பம். அதனால் பங்குகொள்வது இயலாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!(அவ்வப்போது கிளாமர்)
Next post பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!!(மருத்துவம்)