இயற்கை முறையில் அழகு!! (மகளிர் பக்கம்)
அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒரு விஷயம். எல்லோராலும் ப்யூட்டி பார்லர் சென்று ஃபேஷியல், பிளீச்சிங் என நூற்றுக்கணக்கில் செலவழித்து அழகுப்படுத்திக்கொள்ளுதல் என்பது இயலாத காரியம். அதனால் வீட்டில் உள்ள எளிமையானப் பொருட்களை கொண்டு நமக்கு நாமே சுலபமான முறையில் நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை நமக்காக இங்கே சொல்லித் தருகிறார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி.
1. அரை மூடி எலுமிச்சம்பழத்தின் சாற்றுடன் 2 ஸ்பூன் தயிர், கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து பேக் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
2. தக்காளியை மிக்ஸியில் போட்டு மசித்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
3. கால் கிலோ கடலைப் பருப்புடன் 50 கிராம் பாதாம் பருப்பு இத்துடன் கஸ்தூரி மஞ்சள் 100 கிராம் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனை தண்ணீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
4. ஒன்று அல்லது இரண்டு கேரட் எடுத்து அதனுடன் சிறு துண்டு வெள்ளரிக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
5. வெள்ளரிக்காயை தோல் சீவி வட்டமாக வெட்டி கண்களை மூடி சரியாக கண்ணுக்குள் பொருந்தும்படி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். கண்ணின் கருவளையம் நீங்கும்.
6. பன்னீரில் (ரோஸ் வாட்டர்) பஞ்சை நனைத்து அதனை கண்கள் மீது சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.
7. ஒரு ஸ்பூன் சந்தன பவுடருடன் ஒரு ஸ்பூன் பாதாம் பவுடர் கலந்து அதனை பாலில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
8. வாழைப்பழத்தை மசித்து இரண்டு மூன்று சொட்டு தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
9. பப்பாளி பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
10. தரையில் எட்டடி தோண்டிய பின் கிடைக்கும் மண் எடுத்து
முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.எந்த ஒரு பேக் போடுவதற்கு முன்னும் சோப் போட்டு முகம் அலம்பி கொள்ளலாம். ஆனால் பேக் போட்டு முடித்ததும் சோப் போடக்கூடாது. காலையில் குளித்தவுடன் ஆபீஸ் கிளம்பும் முன் பேக் போட்டு ஒரு கால் மணி நேரம் வைத்திருந்து பின் முகம் அலம்பி மேக்கப் போடலாம். ஃப்ரஷ்ஷாக இருக்கும். குளித்த பின் பேக் போடும் போது தோலின் உறிஞ்சும் தன்மை ஜாஸ்தியாக இருக்கும்.இவையெல்லாம் மெனக்கெட்டு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட எளிமையாக நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் அடிக்கடி நம் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுவதால் தோல் பளபளப்பும் கொடுக்கும். இவையெல்லாம் நம்
புற அழகுக்காக நாம் செய்வது.உள்ளுக்கு சாப்பிடும் பொருட்களிலும் நம் அழகுக்கான விஷயங்கள் உள்ளன. எனவே நாம் சாப்பிடும் பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்கும் போது நச்சுகள் வெளியேறும். அதனால் முகம் பொலிவுறும்.பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பழமாவது தினமும் உட்கொள்ள வேண்டும். காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். உணவில் கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் ஆயுளை நீட்டிப்பதோடு, இளமையான தோற்றத்தையும் கொடுக்கும். அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து சாதாரண தண்ணீருக்குப் பதிலாக அந்த தண்ணீரைக் குடிக்கலாம். கடைசியாக அந்த நெல்லிக்காய்த் துண்டுகளை சாப்பிட்டால் அவ்வளவாக புளிப்பில்லாமல் நன்றாக இருக்கும்.அல்லது நெல்லிக்காயை உப்போ சர்க்கரையோ எதுவும் சேர்க்காமல் ஜூஸாக அரைத்துக் குடிக்கலாம். சிலருக்கு நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவதால் ஜலதோஷம் பிடிக்கும் என்றால் அவர்கள் வெந்நீருடன் நெல்லிக்காய் சேர்த்து ஜூஸ் அரைத்துக் குடிக்கலாம்.எப்படியாவது நெல்லிக்காயை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. அதனால் நெல்லிக்காயை துருவி வெயிலில் நன்கு காயவைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
அதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெறுமனே சாப்பிடலாம். நன்றாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது. நெல்லிக்காய் சிறந்த ஆன்டி-ஏஜிங். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற வியாதிகளையும் தடுக்கக் கூடிய சக்தி கொண்டது நெல்லிக்காய். உணவுடன் உடற்பயிற்சியும் முக்கியம். உடற்பயிற்சி செய்யும்போது நம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் என்டாக்ஸின் எனும் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முகம் அதனால் மலர்ச்சியாக இருக்கும்.தினமும் யோகா செய்ய வேண்டும். தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்.
பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி 5 முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம். மொத்தத்தில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை யோகா செய்ய வேண்டும். வேலைக்குப் போகிறவர்களுக்கு நேரமில்லை என்றால் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது செய்யலாம். யோகா செய்யும் போது மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் குறைந்தாலே முகம் மலர்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அழகு அதிகரிக்கும். ஆயுளும் அதிகரிக்கும்.இளம் பெண்கள் அழகைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று முகம், கை, கால் அனைத்தையும் போட்டு மூடிக்கொண்டு வண்டி ஓட்டுகிறார்கள். அது மிகவும் தவறு. காலை பத்து மணி வரை உள்ள வெயிலில் வெளியே வரலாம். உச்சி வெயிலில் தான் அல்ட்ரா வயலட் கதிர்கள் அதிகமாக இருக்கும். காலை வெயிலில் வரும் போது விட்டமின் டி கிடைக்கும். பேக் போடும் அன்று மட்டும் முகத்தைக் கட்டிக் கொள்ளலாம்.
Average Rating