மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமருக்கு பிணை!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 23 Second

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நலக் குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷரிப்.

அவரது பிணை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பிணை கொடுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபிராமி குறித்து சுந்தரம் மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்:அதிர்ந்த காவல்துறை!!(வீடியோ)
Next post பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)