ரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா? அர்ஜுனனா?(சினிமா செய்தி)

Read Time:3 Minute, 30 Second

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்தியிலும் பிரபலமானார். நேரடி இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் பிரபாஸுக்கு ஒரு அழைப்பு விடுத்தார். ரூ. 1000 கோடி செலவில் உருவாகும் மகாபாரதம் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரை கேட்டிருக்கிறார். அந்த அழைப்பை பிரபாஸ் ஏற்றிருக்கிறார்.

மகாபாரதம் படத்தில் பிரபாஸை அர்ஜுனன் வேடத்தில் நடிக்க கேட்டதாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் பீமன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை யார் ஏற்பது என்று முடிவாகாத நிலையில் இதில் நடிக்கும் நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஆமீர்கான் ஏற்றிருக்கிறார். அதற்காக அவர் அமிதாப்பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை ெதாடர்பு கொண்டு பேசி வருகிறார்.

எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை விளக்கும் விதமாக ஒரு ஓவியர் பென்சில் ஸ்கெட்ச் வரைந்து வெளியிட்டிருக்கிறார். தசரதனாக அமிதாப்பச்சன், பீமனாக பிரபாஸ், வாலியாக ராணா, கிருஷ்ணராக ஆமீர்கான், அனுமானாக சல்மான்கான், லட்சுமணனாக ரன்பீர் கபூர், கும்பகர்ணனாக சஞ்சய்தத், திரவுபதியாக தீபிகா படுகோன், சூர்ப்பனகையாக கங்கனா ரனாவத் இடம்பெற்றுள்ளனர்.

2 வருடத்துக்கு முன்பே மகாபாரதம் படத்தை உருவாக்குவதில் ஆமிர்கான் ஆர்வம் காட்டினார். இதற்கிடையில் தீபிகா படுகோன் நடித்த, ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. சட்ட போராட்டத்துக்கு பிறகே அப்படம் வெளியானது. அதைக்கண்ட ஆமிர்கான், மகாபாரதம் படத்துக்கும் எதிர்ப்பு எழுமோ என்ற அச்சத்தில் அப்படம் உருவாக்கும் முயற்சியை கைவிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் அப்படத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறாராம். ரூ.1000 கோடி செலவில் உருவாகவிருக்கும் ‘மகாபாரதம்’ படத்தை பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்க உள்ளது. முன்னதாக ராமாயணம் புராண படத்தில் ராவணனாக நடிக்க ரஜினிக்கு ஆமீர்கான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ரஜினி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை!!(கட்டுரை)
Next post முதியோர் நலன் காப்பது நம் கடமை!!(மருத்துவம்)