தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 39 Second

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார்.

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மேற்கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை என்பதால்தான், மைக் பாம்பியோ பயணத்தை டிரம்ப் ரத்து செய்தார் என தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் வட கொரிய விவகாரத்தில் சீனாவை டிரம்ப் சாடி உள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், ´´வடகொரியாவுக்கு சீனா மிகுந்த அழுத்தம் அளித்து வருகிறது என்று நம்புகிறேன். மேலும் பீஜிங், வடகொரியாவுக்கு எரிபொருள், உரம், பலசரக்குகள் சப்ளை செய்தும் வருகிறது´´ என கூறப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதத்தை ஒடுக்க நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் !!( உலக செய்தி)
Next post பெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது என்று பாருங்கள்!!(வீடியோ)