அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் முடிவு!!(உலக செய்தி)

Read Time:4 Minute, 2 Second

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் முறைப்பாடுகள் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது.

ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது.

இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரானில் சேமித்து வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை கப்பலில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் ஈரான் சம்மதித்தது. அதன்படி, அதிகப்படியான இருப்பில் இருந்த யுரேனியம் கப்பல்களில் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதைதொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் விலக்கி கொண்டன.

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு பின்னரும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சமீபத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நேதன்யாகு காணொளி ஆதாரத்துடன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதைதொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரான் சந்தித்து வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக ஜனாதிபதியின் பதில் திருப்தியளிக்காததால் நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் பேசிய ஆளும்கட்சி தலைவர் அயாத்துல்லா கமேனி, ‘நமது நாட்டின் நன்மைக்கு உதவாவிட்டால், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நாம் தயாராக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகாவில் வித்தை!!(மகளிர் பக்கம்)
Next post சிரிக்காம பாருங்க..! இந்த குட்டியின் காமெடியை !! (வீடியோ)