குண்டா இருக்கறவங்களுக்கு ஒரு நற்செய்தி!!!(மருத்துவம்)
உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த பிரச்னைக்கு விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமாக மாற்று முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நம் உடலுக்குள் இருக்கும் கெட்ட கொழுப்பான Low -density lipoproein(LDL) என்பதை வாழ்க்கைமுறையினை அடிப்படையாக வைத்து மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும். அதே நேரத்தில் மரபணு மருத்துவம், நானோ ஊசிகள் என பல்வேறு முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்றுதான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியில் தற்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தேவையற்ற கெட்ட கொழுப்பினை, நம் உடல் தேவைப்படும் நேரத்தில் நல்ல கொழுப்பாக High density lipoprotein (HDL) மாற்றி பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த பணியினை உடல் செல்களின் உட்கருவான மைட்டோகாண்ட்ரியா மேற்கொள்கிறது. மைட்டோகாண்ட்ரியாவின் இந்த ஸ்டைலைப் பின்பற்றி, செயற்கையாக மாற்ற முடியுமா என்றுதான் முயற்சி செய்து வந்தார்கள். அதில் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெற்றியும் கண்டுள்ளனர்.
UCP 1 Protein எனும் புரதப் பொருளை, கெட்ட கொழுப்புகள் படிந்துள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்தி கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றும் செயலைத் தூண்டுகிறார்கள். 3 வார காலத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. எலிகள் மீது நடந்த ஆராய்ச்சியில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால், உடல் பருமனானவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை என்ற செய்தியை சொல்லும் அதேநேரத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியினையும் விட்டுவிடாதீர்கள் என்ற பின்குறிப்பினையும் கூறிக் கொள்கிறோம்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating