நிதி திரட்டுவதற்காக பாட்டுப்பாடிய நீதிபதிகள்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 29 Second

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், உயர் நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் உயர் நீதிமன்ற ஊடகவியலாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உயர் நீதிமன்ற, டெல்லி மேல் நீதிமன்ற நீதிபதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்றத்திற்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

அப்போது, ‘கேரளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். ஊடகவியலாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!!
Next post இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)