“இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !!( அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 48 Second

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது. தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்’களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம். பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.

அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம். காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். “உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்…” என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார். பொதுவாக சொல்வது என்றால்… ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு தனிமைப் பயணம் பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)
Next post இயற்கை வைத்தியத்தின் பலன்கள்!!(மருத்துவம்)