வட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)
நம் தமிழகத்தில் மட்டும் தான் வேறு எந்தவொரு மொழியிலும் இல்லாத வண்ணம் அத்தனை பேச்சு வழக்குகள் இருக்கின்றன. வரவேற்பதில் இருந்து உபசரிப்பது வரை ஒவ்வொரு ஊரிலும் ஒரு புதுமை, கலாச்சாரம் இருக்கும். உடையில் இருந்து உண்ணும் உணவு, மண்ணில் விளைவிக்கப்படும் பயிர்கள் வரை தனித்தன்மை இருக்கும். Reasons Why North Indian People Like To Be Friend With South Indians வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், மகிழ்வித்து, நல்ல அனுபவங்களை பரிசளிப்போம் என்பதை இங்கே வந்து சென்றவர்கள் மட்டுமே அறிவார்கள். அந்த வகையில், வட இந்திய பெண்கள், தங்கள் தென்னிந்திய நண்பர்களை ஏன் மிகவும் பிடிக்கும், அதற்கான காரணங்கள் என்ன என்று கூறியவை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சாப்பாடு! சாப்பாடு! முதல் காரணம் உணவு. வட இந்தியாவில் பெங்கால் தவிர மற்ற மாநிலங்களில் நமக்கு உணவு பெரிதாக பிடிக்காது. இதுவே, வட இந்தியாவில் இருந்து தெனிந்தியா வரும் பலருக்கும்.. நம் ஊரின் பல வகை தோசைகள், மல்லிகை பூ இட்லி, அதை தொட்டு சாப்பிட பலவகை சட்டினி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தும் பிடிக்கும்.
முக்கியமாக, இவை அனைத்தும் வீட்டில் சமைத்த உணவாக இருந்தால் ஒருபிடி பிடிப்பார்கள். மேலும், வீட்டுக்கு வருவோரை உபசரிப்பதில் நம்மை பற்றி சொல்லவா வேண்டும். நட்பென்று வருகையில் வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் மீது கூடுதல் பாசமாக பழக இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பேச்சுவழக்கு! பேச்சுவழக்கு! இரண்டாவதாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களின் தோழமையை விரும்புவதன் காரணம், பேச்சுவழக்கு. நம் மொழியில் மட்டும் தான் அத்தனை லோக்கல் பேச்சுவழக்குகள் இருக்கின்றன. நண்பனை மட்டுமே, மாமா, மச்சான், நண்பா, தோழரே, மச்சி, சித்தப்பு, சகல என்று வாயில் வரும் சொந்தங்களின் பெயர்களை எல்லாம் வைத்து அழைப்போம். இது போக, டா போட்டு பேசுவது என்னவோ பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். விமர்சனம்! விமர்சனம்!
இது வட இந்திய பெண்கள், தென்னிந்திய பெண்கள் நட்பு குறித்து கூறி இருப்பது., “தென்னிந்திய பெண்கள் தன் தோழிகளை அவர் உடுத்தும் உடையை வைத்து எடை போடுவது இல்லை. கலாச்சார வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருக்கிறது. இதை மற்ற இடங்களில் எதிர்பார்க்க முடியாது. பார்வையிலேயே அவர்கள் நம்மை எப்படி எடை போடுகிறார்கள் என்று கண்டறிந்து விடலாம்” என கூறி இருக்கிறார்கள். (நம்மூர் பெண்கள் அம்புட்டு நல்லவங்களா?) குணாதியங்கள்! குணாதியங்கள்! “மிக எளிதாக நெருக்கமாக பழக துவங்கிவிடுவார்கள். குறுகிய காலத்தில், இவ்வளவு பாசமாக ஒருவரால் பழக முடியாம என்பதை தென்னிந்திய மக்களிடம் ஆச்சரியமாக காணப்படும் விஷயம். மேலும் சிக்கனமாக செலவு செய்ய அவர்கள் நிறைய கற்றுக் கொடுப்பார்கள். என் தோழியிடமிருந்து நான் இதை கற்றுக்கொண்டேன் என ஒருவர் தெரிவித்திருக்கிறார்.” ஒழுக்கம்! ஒழுக்கம்! “நான் கல்லூரியில் அடிக்கடி கட் படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பேன்.
மேலும், பெரும்பாலான என் தோழர்கள், தோழிகள் அதிகம் படித்தால் அவர்களை கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பம். ஆனால், என் தென்னிந்திய தோழி ஒருத்தி தான், எனக்கு நல் ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தாள். கல்லூரிக்கு வந்தது படிப்பதற்கு, லூட்டி அடிப்பதற்கு அல்ல என்று அக்கறையாக, சீரியாசாக பேசுவாள். அவள் அறிவுரைகளுக்கு பிறகு, வகுப்பு நேரத்தில் கட் அடிப்பதை நிறுத்திவிட்டேன்.” அச்சம் தவிர்! அச்சம் தவிர்! “தென்னிந்திய பெற்றோர்கள் பிள்ளைகளாய் தைரியசாலிகளாக வளர்க்கிறார்கள். அங்கிருந்து மும்பை, டெல்லி வந்து படித்து செல்கிறார்கள். ஆனால், இங்கே அப்படி இல்லை… அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு.. அச்சமுண்டு. சுதந்திரம் மற்றும் அச்சமின்றி வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கும் அந்த அப்பா, அம்மாக்களுக்கு முதலில் நன்றி கூற வேண்டும்.”
விழா! விழா! “தென்னிந்தியாவில் விழாக்கள் சிறப்பாக, அழகாக இருக்கும். உடுத்தும் உடைகளில் இருந்து, அந்தந்த பண்டிகை காலங்களில் அவர்கள் வீட்டில் சமைக்கும் பலகாரங்கள், பழ வகைகள் என அனைத்தும் ருசியாக இருக்கும். என் தென்னிந்தியா தோழர்கள் வீட்டில் பண்டிகை நாட்களில் உண்ட உணவுகளை என் வாழ்நாளில் மறக்க முடியாது.”
Average Rating