எத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:12 Minute, 0 Second

நானும் ஒரு 90s கிட் தான். 2K கிட்டாக இருந்திருந்தால்.. ஒருவேளை அந்த காதல் பிரிவு என்னை இத்தனை அழ வைத்திருக்காதோ என அவ்வப்போது எண்ணங்கள் தோன்றும். சிண்டு வண்டுகள் எல்லாம் காதல் தோல்வி கதை பாடும் காலமாக இது மாறி வருகிறது.

நான் எனக்கு பிடித்த உடை வாங்கி தரவில்லை என்று அழுத வயதில், இவர்கள் காதல் தோல்வி ஸ்டேடஸ் போட்டு அப்டேட் செய்கிறார்கள். Real Life Story: I would cry all nights and wake up to swollen eyes. Cover Image Source: whatmegsaid என் முதல் காதல் தோல்வி 27 வயதில்… அப்போது வரையிலும் என் ஒரே ஒரு காதல் அதுதான். ஐந்தாறு ஆண்டுகள் நீடித்த காதல் உறவு அது. ஏறத்தாழ இன்னும் ஓராண்டுக்குள் திருமண பந்தத்தில் இணைவோம் என்று எதிர்பார்த்து காத்திருந்த என் கனவில் பெரும் இடி விழுந்தது. காரணமே அறியப்படாமல் பிரிந்தோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நிசப்தமான மாலையில்… நிசப்தமான மாலையில்…

பிரிவுக்கு பிறகு பிளாக் என்பது அனைவர் வாழ்விலும் நடக்கும் விஷயம். ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் அவன் என்னை பிளாக் செய்யவில்லை. அவ்வப்போது அவன் என்ன பதிவிடுகிறான் என்று தேடி பார்த்து தெரிந்துக் கொள்வேன். ஒரு நிசப்தமான மாலையில் அவன் என்னை பிரிந்து சென்றான்… அவன் என்னை பிரிந்தது என்னை மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கியது. ஒவ்வொரு இரவிலும் அவனை எண்ணி எண்ணி அழுதேன். என் மெத்தை முழுக்க ஈர கண்ணீர் துளிகளால் நனைந்திருந்தன… சிவந்து வீங்கிய கண்கள்… சிவந்து வீங்கிய கண்கள்…

தினமும் அவன் தனது முகநூலில் என்ன பதிவிடுகிறான் என்று பார்த்துப் பார்த்து சோகத்தில் என்னை நானே மூழ்கடித்துக் கொண்டேன். அவன் என்னை பிளாக் செய்யாமல் இருந்ததற்கு காரணம் இது தானோ… நான் அவனை தினமும் வந்து பார்த்து செல்வேன்.. நான் அவனை எண்ணி வருந்தி அழுவேன் என்பதை அறிந்தே இப்படி என்னை பிளாக் செய்யாமல் வைத்திருக்கிறானோ என்ற எண்ணம் என்னுள். தினமும் காலை விடியும் போது என் கண்கள் சிவந்து வீங்கி காணப்படும். இதில், வேடிக்கை என்னவெனில், அவனை எதிர்க்கவோ, அவனை பிளாக் செய்யவோ..

அவன் என்னை ஏமாற்றி வேறு பெண்ணுடன் காதல் உறவில் இருந்து வருகிறான் என்பதையோ.. நான் எந்த ஒரு நண்பரிடமும், தோழியிடமும் கூறவே இல்லை. அந்த தைரியம் கூட எனக்கு எழுவில்லை. புது லீலை… பழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான் பழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான் மகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்? மகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்?

இறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்! இறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்! Featured Posts புது லீலை… பிரிவுக்கு பின்னர் ஒருநாளும் தவறாமல் அவன் முகநூல் பதிவுகளை சரிபார்த்து வந்தேன். என்னை பிளாக் செய்யாமல் புது காதல் லீலை புரிந்து வந்த அவன் கொஞ்சம் வித்தியாசமாக தென்பட்டான். என்னை பிரியும் போது, இந்த காதல் உறவே வேண்டாம்.. இனிமேல் எந்தவொரு பெண்ணுக்கும் தனது வாழ்வில் இடமில்லை என்று வசனம் பேசிய அவன். இப்போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருக்கிறான். முரண்பாடான… முரண்பாடான…

அவன் அந்த பெண்ணை குறித்தும், அந்த பெண்ணுடனான காதல் குறித்தும் சில பதிவிடுவான். அவற்றில், பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என சில குறிப்புகள் கூறுவான். அவை யாவும் அவனது இயல்பான பெண்கள் மீதான விருப்பமே இல்லை என்பது தான் உண்மை. ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் சிலவன கூறி இருக்கிறான். ஆனால், அவற்றுக்கு நேரெதிராக அந்த பெண் குறித்தும், அவளிடம் அவன் ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதும் முரணாக காணப்பட்டது. மாயாஜாலங்கள்! மாயாஜாலங்கள்! ஆகவே, ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது ஆண் அல்ல, பெண்கள் தான்.

ஒவ்வொரு பெண்ணிடம் உறவு கொள்ளும் போதும், அவர்களுக்கு ஏற்ப சில மாறுபட்ட கருத்து கொண்டு, பேசி மயக்கவே இந்த மாயாஜால வேலைகள் எல்லாம். அவனால் மோசமாக நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மனமுடைந்து அழுதேன். அழுகை தவிர என்னிடம் வேறு எதுவும் வெளிப்படவில்லை. ஆனால், நீண்ட சிந்தனைகளுக்கு பிறகு, என் நெருங்கிய தோழியிடம் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்கள் குறித்தும் கூறினேன்.

மோசமான பெண்… மோசமான பெண்… ஆண்களை பொறுத்த வரையிலும் அவள் (என் தோழி) ஒரு மோசமான பெண். ஆண்கள் இடித்தால், அவள் திருப்பி அடிப்பாள், திட்டினால், யார் எவர், எந்த இடம், சூழல் என்று பாராமல் பச்சையாக திட்டுவாள். அந்த “மோசமான” பெண் தான், என்னை ஒரு மோசமான சூழலில் இருந்து வெளிவர பெரிதும் உதவினால். முதன் முதலில் அவள் எனக்கு செய்த உதவு, ஒரு தலையணையை பரிசாக கொடுத்தது. அடித்து தீர்த்தேன்… அடித்து தீர்த்தேன்… எனக்கு எப்போதெல்லாம் அவன் மீது கோபம் வருகிறதோ, அவன் எப்போதெல்லாம் முகநூலில் பதிவிடுகிறானோ அப்போதெல்லாம் இந்த தலையணையை அடித்து உன் கோபத்தை போக்கிக் கொள் என்றாள். மிகவும் வேடிக்கையாக இருந்தது.. முட்டாள்தனமான ஐடியாவாக தான் அதை முதலில் கண்டேன். ஆனால், சில நாட்கள் கழித்து, அவனது முகநூலை கண்டு எனக்கு கோபம் வந்த போதெல்லாம்…

அழுவதற்கு பதிலாக, அந்த தலையணையை அடித்து என் கோபத்தை தீர்த்துக் கொண்டேன். கட்டிபிடித்துக் கொண்டு… கட்டிபிடித்துக் கொண்டு… மாலை நேரங்களில் நாங்கள் பேட் மிட்டன் விளையாட துவங்கினோம், அந்த செட்டில் கார்க்கை அவன் என உருவகம் செய்துக் கொண்டு வேகமாக அடித்து விளையாடி சோர்வடைந்து மகிழ்ந்தோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பொழுது போகவில்லை என்றால் அந்த தலையணையை எடுத்து அடித்து விளையாடுவோம். ஆனால், இரவுகளில் அந்த தலையனையை கட்டிப்பிடித்துக் கொண்டால் மட்டுமே எனக்கு தூக்கம் வரும். புதமை பெண்… புதமை பெண்…

இந்த அடி, உதை எல்லாம் கோபத்தை போக்கினாலும், என்னுள் ஆழமாக துயில் கொண்டிருக்கும் அந்த சோகத்தை விரட்ட உதவவில்லை. அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்தாள் என் தோழி.. நேராக ஒரு உயர்தர சலூனுக்கு அழைத்து சென்றால், என் சிகை அலங்காரத்தை மாற்றினோம், ஹேர் கலரிங் செய்தோம். முன்பை விட நான் அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் தோற்றம் அளித்தேன். காலை, மாலை பேட்மிட்டன் விளையாடியதால் உடல் வடிவமும் மாறியது.

நான் ஒரு புதிய பெண்ணாக உதயமானேன். டேட்டிங்… டேட்டிங்… தினமும் ஒரு புகைப்படம் எடுத்து அதை முகநூலில் பதிவிட துவங்கினேன். அதுவரை எனக்கு கிடைக்காத லைக்ஸ், கமெண்ட்ஸ் என வந்து கொட்டியது. அது வேடிக்கையாக இருந்தாலும், என்னுள் ஒரு மன தைரியம் உருவாக கருவியாக இருந்தது. சில ஆண்கள் என்னுடன் டேட் செய்ய விருப்பப்பட்டனர். அவர்களில் சிலருடன் நான் டேட் செய்யவும் சென்றேன். அவர்கள் பேச்சை துவக்கும் போதெல்லாம், அவர்கள் என் மீது கொண்ட காதல் குறித்து தெரிவிக்கும் போதெல்லாம்…

என் எக்ஸ் காதலன் என்னென்ன மாயாஜாலங்கள் செய்தானோ அதே தான் பிரதிபலித்தது. ஆம்! இவர்களுக்கு என் உடல் சார்ந்த ஈர்ப்பு மட்டுமே… உண்டாகி இருந்தது. ஒரு நாளுடன் டேட் முடிவுபெற்றுவிடும். இயல்பானவன்… இயல்பானவன்… ஆண்களே என்றாலே இவ்வளவு தான்.. இவர்களால் உண்மையான காதலை வெளிப்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட போது தான்.. இல்லை… உண்மையான காதல் கொண்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் என் வாழ்வில் ஒருவன் நுழைந்தான்…

வாழ்க்கை முழுக்க ததும்ப, ததும்பு குறையாத காதலை அளிப்பேன் என்று போலி வாக்குறிதிகளை அளிக்காமல்.. இயல்பாக காதலிக்க கற்றுத் தேர்ந்தவன் அவன். சண்டை, சச்சரவு, விமர்சனம் முன்வைக்கும் ஆண். உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் நான் ஒரு புதிய பெண்ணாக, புதுமை பெண்ணாக மாறினேன். சில சமயங்களில் நம்மீது விழும் அடிகள் சிலவன தான்.. நம்மை சிலையாக மாற்றுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்?(கட்டுரை)
Next post தோல்வியின்றி வரலாறா?(மகளிர் பக்கம்)