ஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி !!(சினிமா செய்தி)
நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார்.
இந்த தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. 2017 இல் ´பேவாட்ச்´ ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. படமும் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் பிரியங்கா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.
இப்போது ´த ஸ்கை ஸ் பிங்´ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பை உதறி விட்டார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்களில் நடித்தது, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன போருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலம் பிரியங்கா சோப்ரா 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரி கழிவுகள் போக 56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating