திரையுலகில் ஒரு புதிய முயற்சி!!(மகளிர் பக்கம்)
திரைத்துறையின் பின்னணியில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் உழைப்பு சுரண்டல், பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை விவாதம் நடந்தது கிடையாது. இந்த நிலையை மாற்ற திரைத்துறையில் அடிப்படை கூலித் தொழிலாளர் முதல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக, தங்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்கும் அமைப்பாக உருவானது தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.
இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையாக “திரையாள்” என்கிற காலாண்டு இதழ் வெளியாகி இருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையில் பெண்களுக்கான உரிமைகளை உரத்து பேசும் பத்திரிகையாக உருவாகி இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு காந்தம்மாள் உருவாக்கிய “தென் இந்தியத் திரைப்பட மகளிர் ஊழியர் சங்கம்” எப்படி தோன்றியது… எவ்வாறு அவர்கள் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டனர் என்பதை பற்றி வேர்கள் என்கிற தலைப்பில் முதல் பக்கமே சுவாரஸ்யமான தகவல்.
பெண் ஆளுமைகளின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. திரைத்துறையை நோக்கி வரும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக வலம் வரப்போவது நம் திரையாள். திரையாள் பத்திரிகையின் இதழாசிரியர் ஈஸ்வரியின் தலையங்கத்தில் சொல்வது அதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகள் உறுதிப்படுத்துகிறது. இதுவரை திரைப்படங்களையும், திரைப்பட நடிகை, நடிகர்களையும் விமர்சனம் செய்து வரும் பத்திரிகைகளை மட்டுமே நாம் சந்தித்திருப்போம்.
ஆனால் திரைத்துறையில் இயங்கும் பெண்களுக்கென்று ஒரு பத்திரிகை உருவாகி இருப்பது இதுவே முதல் முறை. பாலின பாகுபாடின்றி சமத்துவத்தைப் படைக்க வேண்டும் என்கிற திரையாளின் முயற்சிகள் வரவேற்கத்தக்க ஒன்று. இந்தப் பத்திரிகைத் துறையில் தன்னுடைய முதல் காலடியை மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் வைத்திருக்கிறது திரையாள். திரைத்துறையில் உழைக்கும் பெண்களுக்கு திரையாள் நல்ல வழிகாட்டியாக இருப்பாள் என நம்புவோம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating