வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 2 Second

நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை அல்லவா. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்…

தினமும்…

கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். திட்டுகளையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்

பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்

வரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்

வீடு முழுவதும்: குப்பைகளை அகற்றுங்கள்

வாரம் ஒரு முறை…

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்

கிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம் செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்

மாதம் ஒரு முறை…

பாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்

வீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்

தோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்

ஆறு மாதத்திற்கு ஒரு முறை…

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவைத்து, காய வைத்து மடித்து பராமரியுங்கள்.

கிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்

வீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்

வருடம் ஒரு முறை…

பெட்ரூம்: துணிகளையும் மற்ற பொருட்களையும் வைக்கும் ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை கழித்துக்கட்டுங்கள். கம்பளங்களைத் துவையுங்கள். மெத்தைகளை வாக்யூம் செய்யுங்கள் அல்லது நன்கு தூசிதட்டி சுத்தம் செய்யுங்கள். தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி தலையணைகளைச் சுத்தம் செய்யுங்கள்

கிச்சன்: ஷெல்ஃபுகள், கப்போர்டுகள், டிராயர்கள் இவற்றையெல்லாம் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை அகற்றி விடுங்கள். ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை நகர்த்தி வைத்து தரையைச் சுத்தம் செய்யுங்கள்

வீடு முழுவதும்: எல்லாச் சுவர்களையும் நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். குஷன்களையும் ஸ்கிரீன்களையும் தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி சுத்தம் செய்யுங்கள்

கார் ஷெட் அல்லது ஸ்டோர் ரூம்கள்: மூலைமுடுக்கெல்லாம் கூட்டி சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள் அல்லது பிறரிடம் கொடுத்து விடுங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விசயம் எப்போதுமே எடுக்கும் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் இந்த ஒரு விசயத்தை சரியாகக் கையாளத் தெரிந்தாலே போதும் வீட்டு சுத்தத்தைப் பொருத்தவரை பெரும்பாலான வேலைகள் மிச்சமாகி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பெண்ணின் குரலை கேளுங்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்!!(வீடியோ)
Next post இப்படி ரசம் வைத்தால் தினமும் இப்படி தான் செய்ய சொல்வார்கள் / ஊரே மண மணக்கும் மைசூர் ரசம்!!