சைக்கிளிங் செய்யுங்க… பலன்களை பெறுங்க! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 58 Second

* உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க கடினமான உடற்பயிற்சிக்கு பதில் சைக்கிளிங் செய்தாலே போதும். மேலும் பல பயன்களை சைக்கிளிங்கால் பெற முடியும்.

* சைக்கிளிங் செய்யும்போது தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு, உடலுக்குத் தேவையான வலுவும் கிடைக்கிறது. எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையைக் குறைக்க சிறந்த வழி சைக்கிளிங்.

* உடற்பயிற்சியின்மை மூட்டு வலிக்கு ஒரு காரணம். மூட்டுவலி இருப்பவர்களால் எளிதாக சைக்கிளிங் செய்ய முடியும். சைக்கிளிங் செய்வதால் ஆஸ்டியோபொரோசிஸ், ஆர்த்ரைடீஸ் போன்ற மூட்டுப் பிரச்னையிலிருந்து உங்களை காப்பாற்றும். தொடைகள் வலுவாகும்.

* சைக்கிளிங் செய்யும்போது நுரையீரலின் செயல்பாடுகள் சீராகும். இதய வால்வுகளில் கொழுப்புப் படிவது தடுக்கப்படும். கொலஸ்ட்ரால் குறைவதால் மாரடைப்பு முதலான இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும்.

* சைக்கிளிங்கால் கெட்ட கொழுப்புகள் கரையும். உடல் எடை கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

* இயல்பாக சுவாசித்துக்கொண்டே செய்யும் பயிற்சிகள் அனைத்துமே ஏரோபிக் பயிற்சிகள்தான். சைக்கிளிங் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ச்ச்ச்சீ..ப் போங்க!’!!(அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!!(மருத்துவம்)