உணவுகளின் நிறமும் ஆரோக்கியமும்!!(மகளிர் பக்கம்)
உணவுகளின் நிறத்துக்கும் ஆரோக்கி யத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. ஓர் உணவை நோக்கி முதலில் நம்மை ஈர்ப்பது அதன் வண்ணம்தான். உணவுகளின் நிறங்கள், அவற்றின் ஆரோக்கியத் தன்மைகள் அடிப்படையில் அவற்றை 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அதுபற்றிப் பார்க்கலாம்…
பச்சை: பச்சை நிற உணவுகள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகின்றன. பச்சைப் பட்டாணி, பச்சை பீன்ஸ், கீரை வகைகள், பச்சை குடைமிளகாய், கிவி, கிரீன் டீ ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் உடலுக்கு நலம் சேர்க்கும். நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
மஞ்சள்: இந்த நிற உணவுகள் உடல் பொலிவுக்கு உதவுகின்றன. வாழைப்பழம், சோளம் போன்றவை இந்த வகை உணவுகள். மஞ்சள் நிற உணவுகளில் கரோட்டினாய்டு மற்றும் பயோ பிளேவனாய்டு நிறைந்திருப்பதால் எலும்பு மற்றும் பற்களைப் பாதுகாக்கின்றன.
ஆரஞ்சு: இந்த நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. கேரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு உகந்தவை. இவை கண்களைப் பாதுகாக்கின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
சிவப்பு: இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன. இவற்றில் வைட்டமின் சத்துகளும் அதிகமாக உள்ளன. சிவப்பு மிளகாய், சிவப்பு குடை மிளகாய், செர்ரிபழம், தக்காளி, ஆப்பிள் ஆகியவை இத்தகைய தன்மை கொண்ட சிவப்பு நிற உணவுகளாகும்.
நீலம்: இந்த நிற உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கின்றன. வெங்காயம், நாவல்பழம், கத்தரிக்காய், திராட்சை ஆகியவை ஊதா நிற உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் அல்சர் நோயை எதிர்த்துப் போராடுகின்றன. இவை புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகம், மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன. இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நலம் பயக்கின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating