இதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 32 Second

2014 – 2016 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என்பன போன்ற வாதங்கள் பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற மேலவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பங்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜு, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் நாடுமுழுவதும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

அவற்றில் 2016 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகளும் மற்றும் 2014 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 வழக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!(சினிமா செய்தி)
Next post 2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது!!(உலக செய்தி)