உலக கோப்பை ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் `சாம்பியன்’

Read Time:6 Minute, 11 Second

Germany-Hockey.jpgஉலக கோப்பை ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி மீண்டும் `சாம்பியன்’ பட்டத்தை வென்றது. 11-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஜெர்மனியில் கடந்த 6-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. 1986-ல் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியும், 2002-ல் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

ஆஸ்திரேலிய அணி `லீக்’ ஆட்டங்களில் அர்ஜென்டினா, ஜப்பான், நிïசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து இருந்தது. ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. பின்னர் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

அதேபோல் ஜெர்மனியை பொறுத்தவரையில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான `லீக்’ ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தது. ஆலந்து, கொரியா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தது. அரை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து இறுதிப்போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்று இருந்தது.

சமபலத்துடன் மோதல்

இந்நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகள் தொடக்கம் முதலே சம பலத்துடன் மோதின. இதனால் இரு அணியினராலும் உடனடியாக கோல் எதையும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் கிறிஸ்டோபர் ஷெல்லர் இந்த கோலை அடித்தார். ஜெர்மனி முதல் கோலை அடித்த, அடுத்த நிமிடத்தில் (19-வது நிமிடம்) ஆஸ்திரேலிய அணி பதில் கோலை திருப்பியது. அந்த அணி வீரர் மார்க் நோலெஸ் இந்த கோலை அடித்தார்.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன்நிலை பெற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியினர் சிலிர்த்தெழுந்து ஆடினர். இதனால் ஆஸ்திரேலியா 27-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. அந்த அணி வீரர் மாத்ï நெய்லர் இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

தாக்குதல் ஆட்டம்

2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. 39-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 3-வது கோலை (டிராய் எல்டர்) அடித்தது. பின்னர் ஒருமுனையில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற திருப்தியில் ஆஸ்திரேலிய அணியினர் மெத்தனமாக ஆட, மறுமுனையில் ஜெர்மனி அணியினர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பந்து ஜெர்மனி அணியினரின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் இருந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய ஜெர்மனி அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் ஜெர்மனி (மோரிட்ஸ்) 2-வது கோலை அடித்தது. 2-வது கோலை அடித்த, அடுத்த 3-வது நிமிடத்தில் (49-வது நிமிடம்) ஜெர்மனி 3-வது கோலை (ஜோர்ன் எம்மர்லிங்) அடித்து ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் சமன்நிலை படுத்தியது. ஆட்டத்தை சமன்நிலை படுத்தியதைத் தொடர்ந்து ஜெர்மனி அணியினர் ஆட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரித்தனர். இதற்கு அந்த அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜெர்மனி 4-வது கோலை அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது. முதல் கோலை அடித்த அந்த அணி வீரர் கிறிஸ்டோபர் ஷெல்லரே, இந்த கோலையும் அடித்து ஜெர்மனியை முன்னிலை பெறச் செய்தார்.

ஜெர்மனி வெற்றி

பின்னர் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காததால் இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் `சாம்பியன்’ பட்டத்தை தட்டிச் சென்றது. 2002-ல் கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியிலும் ஜெர்மனி-ஆஸ்திரேலிய அணிகள்தான் மோதின. இந்த ஆட்டத்திலும் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Germany-Hockey.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எய்ட்ûஸ கட்டுப்படுத்த மருந்து: ஈரான் கண்டுபிடிப்பு
Next post விண்வெளி ஆய்வு நிலைய பணிமுடித்து பூமிக்கு புறப்பட்டது அட்லாண்டிஸ்