வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் – புடின் சந்திப்பு ஆரம்பம்!!( உலக செய்தி )

Read Time:6 Minute, 5 Second

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையேயான உச்சி மாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் சற்று முன்னர் ஆரம்பமானது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அவர்களுக்கு இடையேயான பகைமையை இன்னமும் அதிகரித்தது.

இதன் தொடக்கத்தை அறிய வேண்டும் என்றால் 1945 – 1989ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த பனிப்போருக்கு செல்ல வேண்டும்.

இவ்விரு நாடுகளும் நேரடியாக சண்டையிட்டதில்லை. சோவித் யூனியன் வீழ்ந்த பிறகு, மற்றும் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா எழுந்த பிறகும் கூட இந்த நாடுகளுக்கிடையேயான பகைமை குறைந்தபாடில்லை.

குறிப்பாக, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மோசமடைய செய்தது. அதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதித்தன.

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் தலையீடு இருந்ததன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார் என்ற கருத்து எழுந்ததால் டிரம்ப் – புடின் இடையிலான உறவு உலகளவில் கவனமுடன் ஆராயப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது.

மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யா செய்தது என்ன மற்றும் ரஷ்யாவுக்கும் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவுக்கும் தொடர்பேதாவது உள்ளதா என்பதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் விசாரணையை “சூனிய வேட்டை” என்று கூறி டிரம்ப் ரத்து செய்திருந்தார்.

தேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயக கட்சியினரின் கசப்புணர்வால் உந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு இது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தனது குடியரசு கட்சியின் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.

கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதற்காக ஜி 8 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யாவை மீண்டும் சேர்த்துகொள்ளும் முடிவுக்கு டிரம்ப் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்தார்.

புடினை பாராட்டும் வகையிலான பல கருத்துகளை டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக புடினை சிறந்த தலைவர் என்றும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமைவிட சிறந்த தலைவர் என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டே டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் சர்ச்சைக்கு மத்தியில் வெற்றிபெற்ற புடினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று தனது ஆலோசகர்கள் கூறியதையும் கேட்காமல், டிரம்ப் புடினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆனால், டிரம்ப் குறித்து சில சமயங்களே உரையாற்றிய போதும் புடின் வார்த்தைகளை கவனமுடனே கையாண்டார். இருந்த போதிலும், புடின் டிரம்பை “மிகவும் சாமர்த்தியமான மனிதர், புத்திசாலி” என்று பாராட்டியுள்ளார்.

அதிகவிலான அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இரண்டு இடத்திலுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் ´நியூ ஸ்டார்ட்´ என்ற ஒப்பந்தத்தின் மூலம் தங்களது அணுஆயுதங்களை குறைப்பதற்கும், கட்டுப்படுவதற்கும் ஒப்பு கொண்டுள்ளனர். அதுகுறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டபின் அந்நாட்டின் மீதும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் அமெரிக்கா விதித்த தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் பேசியது வன்முறையா ?(வீடியோ)
Next post எத்தனை போலீஸ் வந்தாலும் அனைவரையும் வெளுத்து வாங்கிய துணிச்சல் இளைஞர் – நீங்களே வீடீயோவை பாருங்க!!( வீடியோ)