பாலியல் குற்றவாளிகளுக்கு வாகன உரிமம் ரத்து, ஓய்வூதியம் கிடையாது!(உலக செய்தி)

Read Time:2 Minute, 23 Second

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளது.

இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ​தொடங்கியுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்‌ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்று தொடங்கப்படும்.

மேலும் பொலிஸ் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும். ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளேன் என அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!!(அவ்வப்போது கிளாமர்)
Next post ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)