ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை!!(சினிமா செய்தி)

Read Time:3 Minute, 37 Second

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.

நிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-

டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.

இது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.

இதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.

மலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது?(மருத்துவம்)
Next post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)