தாய்லாந்தில் 14வது நாளாக அவதி குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு நீர்மூழ்கி கவசத்துடன் நீந்த பயிற்சி!!

Read Time:4 Minute, 32 Second

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள் நீண்ட தூரம் தண்ணீரில் மூழ்கி நீந்துவதற்கு, கவச உடை அணிந்து சுவாசிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சிறுவர்கள் தங்கியிருக்கும் குகை பகுதிக்கு மேலே துளையிட்டு அவர்களை மீட்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் ‘காட்டு பன்றிகள்’ என்ற பெயரில் கால்பந்தாட்ட அணி பயிற்சி பெற்று வந்தது. இதில் 11 வயது முதல் 16 வயது சிறுவர்கள் 12 பேருக்கு, எகோபோல் சந்தாவாங் என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில், சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லூவாங் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள், தங்கள் பயிற்சியாளருடன் கடந்த மாதம் 23ம் தேதி சாகச பயணம் மேற்கொண்டனர்.

குறுகலான குகைக்குள் 4 கி.மீ தூரம் சென்றவர்களால் மீண்டும் திரும்பி வர முடியவில்லை. கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் நிரம்பி விட்டது. இவர்களை வெளியே கொண்டு வர சர்வதேச குழுவினர் உதவி நாடப்பட்டது. அவர்கள் குகைக்குள் உள்ள தண்ணீரில் நீந்தி சென்று சிறுவர்கள் இருந்த இடத்தை கடந்த 2ம் தேதி கண்டுபிடித்தனர். மீட்பு பணியில் தாய்லாந்து வீரர் சமன் குணன் ஈடுபட்டு வந்தார். ஆக்சிஜன் தீர்ந்ததால் அவர் பலியானார். இது குறித்து சியாங் ராய் கவர்னர் நராங்சக் கூறுகையில், ‘‘தற்போது சிறுவர்களுக்கு நீர்மூழ்கி கவச உடை அணிந்து சுவாசிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு சிறுவர்கள் தயாரானபின் நீரில் மூழ்க வைத்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனமழை மீண்டும் தொடங்கினால், தண்ணீருக்குள் மூழ்கியபடி சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் உடனடியாக ஈடுபடுவர்’’ என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் குழு

குகைக்குள் சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கு மேலே துளையிட்டு அவர்களை ட்யூப் மூலமாக மீட்கும் ஆலோசனையை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிறுவனத்தின் அதிபர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்காக அவரது நிறுவனத்தின் இன்ஜினியர்களை உதவிக்கு அனுப்புவதாகவும் கூறியுள்ளார். இவர் போர் நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறார். குகைகளை அகலமான துளையிட்டு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் பணியையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்திடம் குகையை ஊடுருவி படம்பிடிக்கும் ரேடார்களும் உள்ளன. இந்தக் குழு விரைவில் தாய்லாந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கும் எனத் தெரிகிறது.

பயிற்சியாளர் மன்னிப்பு

குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் ஒரு நோட்டு புத்தகத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி நீர்மூழ்கி வீரர்கள் மூலமாக கொடுத்துள்ளனர். கால்பந்தாட்ட அணி பயிற்சியாளர் எகோபோல், சிறுவர்களின் பெற்றோர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிறுவர்கள் நலமுடன் உள்ளனர். அவர்களை முடிந்தவரை நலமுடன் பார்த்துக் கொள்கிறேன். அவர்களை குகைக்குள் அழைத்து வந்து சிக்கலில் சிக்க வைத்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா?(மருத்துவம்)
Next post 35 வருடங்களுக்கு பின் தரையிறங்கிய விமானம் | நடந்தது என்ன ? (வீடியோ)