பேஸ்புக் பங்கு விலை உயர்ந்தது உலக பணக்காரர் பட்டியல் 3ம் இடத்தில் ஜுகர் பெர்க்!!

Read Time:1 Minute, 54 Second

உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.அமெரிக்க பங்கு சந்தையில் நாள்தோறும் வர்த்தகம் முடிந்ததும், உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலை பிளோம்பெர்க் நிறுவனம் வெளியிடும். நேற்று வெளியிடப்பட்ட இப்பட்டியலில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் முதல் முறையாக தொழிலதிபர் வாரன் பப்பெட்டை முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார். 34 வயதாகும் ஜுகர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ.5.5 லட்சம் கோடி. இது, 87 வயதாகும் பெர்க்ஷயர் ஹாத்அவே நிறுவன தலைவர் வாரன் பப்பெட்டின் சொத்து மதிப்பை விட ரூ.2,500 கோடி அதிகம்.

தகவல் திருட்டு தொடர்பான பிரச்னையால், பேஸ்புக் பங்கு மதிப்பு 152.22 அமெரிக்க டாலராக சரிந்திருந்த நிலையில், நேற்றைய வர்த்தக முடிவில் 203.23 டாலராக உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக, ஜுகர்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில், அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோசும், 2வது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும் நீடிக்கின்றனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் இருப்பவர்கள் தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட!!(மருத்துவம்)
Next post நீண்ட அடர்த்தியான முடி வளரச்செய்யும் வீட்டு வைத்தியம்!!(வீடியோ)