அரபு நாடுகள் ஓரம் கட்டியதால் அமெரிக்காவின் நட்பை பெற கோடிகளை கொட்டும் கத்தார் : டிரம்புக்கு நெருக்கமானவர்களுக்கு வலை!!

Read Time:4 Minute, 4 Second

அரபு நாடுகளால் ஓரம் கட்டப்பட்ட கத்தார், அமெரிக்காவின் நட்பை பெறுவதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது.அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாகவும், தங்களுக்கு பரம எதிரியாக உள்ள ஈரான் நாட்டுடன் நட்பு பாராட்டுவதாகவும் சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த காரணத்துக்காக சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட், பக்ரைன் ஆகியவை கத்தார் மீது கடந்தாண்டு ஜூனில் திடீரென பொருளாதார தடைகள் விதித்தன. தங்கள் கூட்டமைப்பில் இருந்து விலக்கியும் வைத்தன. கத்தாருக்கு விமானம், கப்பல் போக்குவரத்து நடத்தும் நாடுகள், தங்கள் நாட்டின் வான் மற்றும் கடல் எல்லைகளை பயன்படுத்தவும் தடை விதித்தன. இது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமானங்களை நேரடியாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

மற்ற நாடுகளின் வழியாக விமானத்தை இயக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் பயணம் செய்வது, அதிக எரிபொருள் செலவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அரபு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிளவை சரி செய்ய அமெரிக்கா எடுத்த முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டன.

இந்நிலையில், அரபு நாடுகள் தன்னை முழுமையாக ஒதுக்கிவிட்ட நிலையில், ஈரான் உடனான நட்பை கத்தார் மேலும் அதிகமாக்கி இருக்கிறது. அதே நேரம், ஈரானுடன் அமெரிக்காவுக்கும் பகை இருப்பதால், இருநாடுகளுக்கும் பகையின்றி இப்பிரச்னையை தூதரக ரீதியில் கையாளும் நடவடிக்கையில் கத்தார் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நண்பர்கள் போன்றவர்களை வசப்படுத்தும் முயற்சியில் கத்தார் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி அதற்கு நல்ல பலனையும் அளித்து வருகிறது. கத்தார் மீது அமெரிக்காவுக்கு கடந்தாண்டு இருந்த கடினமான மனநிலை இப்போது சற்று மிதமாகி இருக்கிறது.

கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரகுமான் தானி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அப்போது நடந்த விருந்தில், அமெரிக்க அமைச்சர் ஸ்டீவன் முனுச்சின், ஏராளமான அமெரிக்க எம்பி.க்கள் கலந்து கொண்டனர். இதில், தானியுடன் ஸ்டீவன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து, ‘அமெரிக்காவின் மிகச் சிறந்த நட்பு நாடாக கத்தார் இருக்கிறது’ எ்ன்று பாராட்டினார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்காகவும், டிரம்ப்பின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் கடந்தாண்டில் மட்டும் அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளுக்கு பல்வேறு வகையில் ரூ.200 கோடிக்கு மேல் கத்தார் செலவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post வெயில் கால டிப்ஸ்…!(மகளிர் பக்கம்)