அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டியல் இந்திய வம்சாவளி நீதிபதி அமுல்தபார் பெயர் நீக்கம்!!

Read Time:2 Minute, 14 Second

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் கென்னடி (81). இவர் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு பதிலாக புதிய நீதிபதியை ேதர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: உச்சநீதிமன்ற புதிய நீதிபதியை தேர்வு செய்வதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 25 நீதிபதிகளில் 7 பேரிடம் அதிபர் டிரம்ப் நேர்காணல் நடத்தினார்.

கடந்த 2ம் தேதி 4பேரிடமும் மறுநாள் 3 பேரிடமும் டிரம்ப் நேர்காணல் நடத்தினார். முதல்நாளில் அதிபர் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தபார் (49) என்ற நீதிபதியிடம் நேர்காணல் நடத்தினார். இவர் சின்சினாட்டி நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேசிய பொது வானொலி ெவளியிட்ட செய்தியில், ` உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ள நீதிபதிகள் பட்டியலில் பிரட் கெவன்னா, அமி கோரின பரட், ரேய்மாண்ட் கேத்லட்ஜ் ஆகிய 3 பேர் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், அமுல் தபார் பெயர் இடம்பெறவில்லை’ என தெரிவித்துள்ளது. புதிய நீதிபதி யார் என்பதை அதிபர் டிரம்ப் வரும் 9ம் தேதி அறிவிப்பார். அதாவது இந்திய நேரப்படி 10ம் தேதி காலை 6.30க்கு இந்த அறிவிப்பு வெளியாகும். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமுல்தபார் தேர்வு செய்யப்படாதது இது 2வது முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டா ஒரு ஹிட்லரா?(கட்டுரை)
Next post தமிழ் நாட்டில் ஆச்சிர்யமூட்டும் 7 இடங்கள் !!(வீடியோ)