வரலாறு காணாத கனமழையால் வெள்ளக்காடான ஜப்பான்….. 76 பேர் பலி….92 பேர் மாயம்!!

Read Time:1 Minute, 51 Second

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக விடாது பெய்த தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி கடந்து சென்று பல பகுதிகளை வெள்ளக்காடாக்கியது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவுக்குள் சிக்கியும் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர். காணாமல் போன சுமார் 92 பேரை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களை மீட்க 40 ஹெலிகாப்டர்கள் பய்னபடுத்தப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவசர வைத்தியம்!!(மருத்துவம்)
Next post பட்டு புடவைய இப்படி கட்டினால் ஒல்லியாக தெரிவீர்கள்!!(வீடியோ)