பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 18 Second

சிலருக்கு, வெயில் பாதங்களில் படும்போது தோல் உரிந்து வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாக்கும். முறையாக பராமரித்தால் பட்டுப்போன்ற பாதங்களை பெறலாம். கடையில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்கி கால்விரல்களின் நகங்களில் சொட்டு சொட்டாக விடவேண்டும். சிலநிமிடங்களில் நகக்கண்களில் உள்ள அழுக்குகள் நுரையாக வெளியே வந்துவிடும். இந்த அழுக்குகளை நீக்கி, கால்களை நன்றாக துடைத்துவிடவேண்டும்.

அடுத்து, சமையல் சோடா 2 டீஸ்பூன் 1 டீஸ்பூன் மோர், 1/2 டீஸ்பூன் சர்க்கரை கலந்து பாதங்களில் பூசவேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு துடைத்துவிட்டு 1/2 பக்கெட் சுடு தண்ணீரில் 2 துண்டுகள் இமாலயன் சால்ட், ஒரு கைப்பிடி சமையல் உப்பு, 30 மிலி விளக்கெண்ணெய், 2 எலுமிச்சைப்பழம் கட் செய்து தோலுடன் மற்றும் மைல்ட் ஷாம்பூ 1 டீஸ்பூன் போட்டு கலக்கி, காலை அதனுள் வைத்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கால்களில் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்துவிட்டு, க்யூனிக் ஸ்டானாலும் தேய்க்க வேண்டும். ஸ்க்ரப்பரால் தேய்த்து அப்படியே விட்டால் தோல் உரியும். எமரிக் பேப்பரால் மேலே தேய்த்துவிட்டால் உரிந்த தோல் படிந்து மென்மையாகிவிடும். காலை நன்றாக துடைத்துவிட்டு, மாய்சரைஸ் க்ரீம் அப்ளை செய்து, படுக்கும் போது சாக்ஸ் போட்டுக் கொண்டு படுக்கச் செல்லலாம். இதை வாரத்துக்கு ஒரு முறை செய்வதால், ரோஜாப்பூ பாதம் போல் மாறிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ் !!(மகளிர் பக்கம்)
Next post இந்த லாரி டிரைவரின் திறமையை பாருங்கள் !!(வீடியோ)