ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் – பலர் காயம்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 25 Second

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரில் அமைந்துள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இடம் கிடைக்காத சில அதிருப்தியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்துள் இன்று சுமார் 30 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. கண்ணில் பட்ட ஆசிரியர் – ஆசிரியைகளை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் பல ஆசிரியர்களும், பல்கலைக்கழக காவலாளிகளும் காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் தங்களை சமாஜ்வாதி கட்சி தொண்டர்களாக அடையாளம் காட்டிகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேர்காணல் நிறுத்தப்பட்டு, பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் கைது!!(உலக செய்தி)
Next post சீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டெடுப்பு!!(உலக செய்தி)