உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!( மருத்துவம்)

Read Time:4 Minute, 11 Second

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா? எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா?’ என்று அடுத்தகட்ட குழப்பங்கள் வருவது இயல்புதான். இந்த சந்தேகங்களை உடற்பயிற்சி நிபுணர் சுசீலாவிடமே கேட்போம்…

‘‘உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலைவேளைதான். காலை உடற்பயிற்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச்செய்து நாள் முழுவதும் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வேலைகளை திறமையாகவும், அமைதியாகவும் செய்பவர்களாகவும் அதேசமயத்தில் அதிக உற்பத்தித்திறன் உடையவர்களாகவும் இருப்பதாக அமெரிக்க பிரிஸ்டல் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

காலை வேளையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு வழி இல்லையா என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வி தான். தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் இரவு நேரப்பணியில் இருப்பவர்களுக்கு காலை எழுந்து உடற்பயிற்சி செய்வது முடியாத காரியம்தான்.

இதனால் காலை உணவுக்குப்பின் ஒரு மணிநேரம் கழித்தோ, மதிய உணவு முடித்து 2 மணிநேரத்துக்குப் பின்னரோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உணவு எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேர இடைவெளிவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங் போகலாம். இவற்றை இரவு உணவுக்கு முன்னர் செய்ய வேண்டும். அதற்காக வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான ஆற்றல் தேவைப்படும் என்பதால் கொஞ்சம் திரவ உணவு எடுத்துக் கொள்ளலாம். வேலை நேர மன அழுத்தத்தை குறைக்கவும் வாக்கிங், ஜாக்கிங் பயன்படும்.

விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாமே என்றும் சோம்பலாகத் தோன்றும். அந்த நாட்களில் உடற்பயிற்சிக்கு இணையான மற்ற வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக எஸ்கலேட்டர், லிஃப்ட் உபயோகிப்பதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்தலாம். அருகிலுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்தே செல்வது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது போன்ற சின்னச்சின்ன வேலைகள் உடற்பயிற்சிக்கு இணையாகப் பலன் தரும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான அடிப்படை அசைவுகள் கிடைத்து விடும்.

காலை, மாலை என்று உடற்பயிற்சிக்கென பி்ரத்யேகமாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள், அலுவலக வேலைகளுக்கிடையேயும் சிறிது இடைவெளி நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து சமாளிக்கலாம். முக்கியமாக புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதலோடு கற்றுக் கொண்ட பிறகு தொடங்குவது நல்லது.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டோல்கேட் தாம்பரம் தெறிக்கவிட்ட நபர் துணிச்சலான கேள்வி 5 கிலோ மீட்டர் கூட ஆகல அதுக்குள்ள இன்னோன்னா!!(வீடியோ)
Next post இலங்கையின் உயர் குழாம் அரசியல்!!(கட்டுரை)