படகு கவிழ்ந்ததில் 103 பேர் பலி!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 41 Second

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29ஆம் திகதி 103 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்ததும், கடல் சீற்றமும்தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கியுள்ள 525 இந்தியர்களில், 104 பேர் மீட்பு!(உலக செய்தி)
Next post உடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?(அவ்வப்போது கிளாமர்)