நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவால் அதிகரிப்பு!!

Read Time:1 Minute, 51 Second

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் உடைய மற்றும் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1ம் திகதி மாற்றியமைக்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த மாதத்துக்கான, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.

இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரித்து உள்ளது. இதன் மூலம், ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை இனி ரூ.484.67 ஆக உயர்கிறது.

இதைப்போல மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

உள்நாட்டு மானியமில்லா சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஜி.எஸ்.டி. அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் திடீர் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”!!(அவ்வப்போது கிளாமர்)
Next post விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்)