பலாக்கொட்டை சமையல்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 15 Second

1. பலாக்கொட்டையை அடுப்பில் சுட்டும், கிழங்கு வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம்.
2. வேகவைத்த பலாக்கொட்டையை மிகச்சிறிய துண்டுகளாக்கி, சுண்டல் போல தாளித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து உண்ணலாம்.
3. பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு வறுவல், கத்தரிக்காய் பலாக்கொட்டை வதக்கல், வாழைக்காய் பலாக்கொட்டைப் பொரியல், பலாக்கொட்டை முருங்கைக்காய் குருமா ஆகியவையும் செய்யலாம்.

4. இறால் பலாக்கொட்டை வறுவல், சிக்கன், மட்டன் கறியோடு பலாக்கொட்டை குழம்பு வறுவல் ஜோர்!
5. பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து விட்டு மசித்து பால், நெய், சர்க்கரை சேர்த்து முந்திரி, உலர் திராட்சை அலங்கரித்து அல்வா செய்யலாம்.
6. பலாக்கொட்டையை வேகவைத்து மசித்து பால் சேர்த்து பாயசம் செய்யலாம்.
7. பலாக்கொட்டை மேல் தோல் நீக்கி நீரில் ஊறவைத்து அரிசியுடன் அடை செய்யலாம்.
8. வேகவைத்து மசித்த பலாக்கொட்டை விழுது, ஊறவைத்த ஜவ்வரிசி, வறுத்த நிலக்கடலை கலவையில் வடை செய்து சுவையுங்கள்.
9. சிலர் ரயிலில் பலாப்பழம் தின்று விட்டு கொட்டைகளை போட்டு விடுகின்றனர். அவர்களுக்கு இதன் பயன் தெரிவதில்லை.
10. பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து நான்காக வெட்டி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து போட்டு வேகவைத்து வெந்த பலாக்கொட்டைப் போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வெந்ததும் இறக்கவும். 1 கப் தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், 3 காம்புடன் உலர்மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை தாளித்து கலவையில் கொட்டவும். 1 டீஸ்பூன் நெய் விட்டு மூடவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும். கமகம வாசத்துடன் கூட்டு தயார்.
11. மரவள்ளிக்கிழங்கையும், பலாக்கொட்டையையும் வேகவைத்து தோலுரித்து குழம்பு செய்யலாம். இறக்கும் தருவாயில் தேங்காய், கசகசா அரைத்து ஊற்றவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி மூடவும். பின்னர் பரிமாற சுவையான உணவு தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா!!(அவ்வப்போது கிளாமர்)
Next post காஷ்மிர் அஸ்திரங்கள்: தேர்தல் களத்துக்குத் தயாராகிறார் மோடி!!(கட்டுரை)