வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள் !!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 18 Second

* நிறைய வீடுகளில் ஒரு துடைப்பம் வாங்கினால், வருஷம் முழுக்க அதிலேயே குப்பை கொட்டப் பார்ப்பார்கள். அடிக்கடி நீண்ட தோகையுள்ள நல்ல துடைப்பங்களை வாங்குங்கள்.

* குப்பைத் தொட்டிக்கு என்று தனிப்பட்ட முறையில் கார்பேஜ் பேக்ஸ் நிறைய அளவுகளில் கிடைக்கின்றன. அதை வாங்கக் கஞ்சத்தனம் செய்து, பலரும் ‘டஸ்ட் பின்’னுக்குப் பொருந்தாத ஏதோ ஒரு பையை மாட்டி வைப்பார்கள். இதனால் பாதிக் குப்பை தரையிலும் மீதிக் குப்பை பையைத் தாண்டி ‘டஸ்ட் பின்’னிலுமாகச் சிதறிப் போகும்.

* கிளீனிங் ஆரம்பிக்கும்போது, முதலில் டாய்லெட், கிச்சன் இவற்றில் ஆரம்பித்து, பின் படுக்கையறை, ஹாலுக்கு வாருங்கள். இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் இடுப்பொடியத் துடைத்துக்கொண்டே இருக்க வேண்டிவரும்.

சேர்ப்பானேன்… தவிப்பானேன்!

* பொருட்களைச் சேர்ப்பதற்கு தேவைப்படுவதைவிட அதை அகற்றத்தான் நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனெனில், பிரிவு என்பது மனிதனை அத்தனை பாதிக்கும் அது, குப்பையாக இருந்தாலும் சரி!

* குப்பையை ஸ்கீம் போட்டு அகற்றுவதைப் பற்றியெல்லாம் பாடம் சொல்ல நான் அறியேன். எனினும், ‘சேர்ப்பானேன்… தவிப்பானேன்!’ என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுகிறது. இந்த அவசர காலத்தில், பொருள் ஈட்டவும் ஈட்டிய பொருளைச் செவ்வனே செலவிடவும் சேமிக்கவும் எவ்வளவு கடினமாக உள்ளது. செலவினங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேவையானவை, தேவையற்றவை எனச் சிக்கனம் கருதாமல், பல காரணங்களுக்காகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். விளைவு? குப்பை. சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதைவிட, சேரவிருக்கும் குப்பைகளை அகற்றலாமே!

* உணவு, உடை, குழந்தைகளுக்காக வாங்கும் பொருட்கள் என அனைத்திலும் நாம் சற்றே கண்டிப்பைக் காட்டப் பழகிக்கொள்ள வேண்டும். விளம்பரங்களுக்கோ போலி கெளரவத்துக்கோ இரையாகாமல் அது தேவையா என்று தீர முடிவு செய்தபிறகே பர்ஸை பிரியுங்கள். கூடவே, பழுதடைந்த பொருட்களைக் களைந்த பின்னரே, புதியதை வாங்குவதென உறுதியாக இருத்தல் வேண்டும். இப்படி வாங்குவதிலும் அகற்றுவதிலும் பாலன்ஸ் இருந்தால், வீடே (அத்தனை சுத்தம்) நமக்கு சோறு போடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டாவும் முஸ்லிம்களும்!!(கட்டுரை)
Next post செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!!(அவ்வப்போது கிளாமர்)